பக்கங்கள்

திங்கள், 26 நவம்பர், 2012

சோப் ஆயிலில் சூப்பர் லாபம்!


சோப் ஆயிலில் சூப்பர் லாபம்!


வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். 

தயாரிப்பது எப்படி?

ஒரு பிளாஸ்டிக் வாளியில் 4 லிட்டர் வடிகட்டிய நல்ல தண்ணீரில் காஸ்டிக் சோடா 100 கிராம் போட வேண்டும். தண்ணீர் சூடாகும். மற்றொரு வாளியில் 4 லிட்டர் வடிகட்டிய நல்ல தண்ணீரில் சோடா ஆஷ் (வாஷிங் பவுடர்) ஒரு கிலோ போட வேண்டும். அதுவும் சூடாகும். இன்னொரு வாளியில் 2 லிட்டர் நல்ல தண்ணீரில் யூரியா ஒன்றரை கிலோ போட வேண்டும். தண்ணீர் குளிர்ந்து போகும். 3 வாளி நீரையும் ஒரு மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும். அவை சம வெப்ப நிலையை அடையும். 3 வாளிகளில் உள்ள நீரை ஒரு கேனில் கொட்டி கலக்க வேண்டும்.

இன்னொரு வாளியில் சிலரி ஒரு கிலோ, ஒலிக் ஆசிட் 100 கிராம் கலக்க வேண்டும். அதை கேனில் உள்ள கலவையில் கொட்டி சில்வர் கரண்டியால் நன்கு கலக்க வேண்டும். நுரை பொங்கி வரும். 2 மணி நேரம் காத்திருந்தால் நுரை வற்றி, சோப் ஆயில் கிடைக்கும். அதில் நறுமண லிக்விட் 15 மிலி கலந்தால் சோப் ஆயில் தயார். இதன் மூலம் 10 லிட்டர் சோப் ஆயில் கிடைக்கும்.

உபயோகிக்கும் முறை: 200 மிலி சோப் ஆயிலில் 10 லிட்டர் தண்ணீர் கலந்து பயன்படுத்த வேண்டும். 10 முதல் 15 துணி வரை அரை மணி நேரம் ஊறவைத்து கையாலோ, வாஷிங்மெஷின் மூலமோ துவைக்கலாம். துணி துவைக்க மட்டுமல்ல, பாத்திரம் கழுவ, தரை, கழிப்பறை, பாத்ரூம், வாகனங்களை சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம். இதை பயன்படுத்துவதால் சருமத்துக்கு எவ்வித கேடும் ஏற்படாது.

என்னென்ன தேவை?

சிலரி, காஸ்டிக் சோடா, சோடா ஆஷ், யூரியா, ஒலிக் ஆசிட், பெர்ப்யூம், தண்ணீர். இவை அனைத்தும் கெமிக்கல் கடைகளில் கிடைக்கிறது. ரூ.10 ஆயிரம் போதும் இந்த தொழில் செய்ய பெரிய அளவில் இடம் தேட வேண்டிய அவசியம் இல்லை. மூலப் பொருட்கள், தயாரித்த சோப் ஆயில்கள் இருப்பு வைக்க வீட்டுக்குள் பாதுகாப்பான சிறு இடம், சோப் ஆயில் தயாரிக்க வீட்டு பின்புறம் அல்லது ஒதுக்குப்புறமான சிறு இடம் போதுமானது. ரூ.10 ஆயிரம் முதலீட்டில் தளவாட சாமான்கள், ஒரு மாத சோப் ஆயில் உற்பத்திக்கு தேவையான கெமிக்கல்களை வாங்கி விடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக