பக்கங்கள்

புதன், 21 நவம்பர், 2012

வாழ்கையை புரிந்துகொண்டு வாழவேண்டும்

 வாழ்கையை புரிந்துகொண்டு வாழவேண்டும்

ஒரு மனிதன் நம்முடைய மனநிலைக்கு ஒத்துவரவில்லை என்றால், அவனை பையித்தியக்காரன், சைக்கோ, சுரணையில்லாதவன், சிந்திக்கதெரியாதவன் அல்லது கோமாளி என்று இப்படி எதாவது ஒரு பெயரை அவனுக்கு நாம் சூட்டிவிடுகின்றோம். சில நேரங்களில் நம்மையே நாம் இப்படி நினைத்துக்கொள்வதும் உண்டு, ஆனால் உண்மை அப்படியல்ல. ஒவ்வொரு மனிதனையும் கடவுள் ஒரு விதமாக படைகின்
றார், எல்லாரும் நம்மை போலவே இருக்கவேண்டும் என்று நாம் நினைப்பது தவறு.

இந்த உலகத்தில் பலவகையான மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்களை 7 வகையாக பிரிக்கலாம், மனிதர்களின் மனநிலை அடிப்படையில் அவர்களை 7 விதமாக வகைபடுத்தலாம்.

முதல் வகை: பயந்த குணம் உள்ளவர்கள். இவ்வகை மனிதர்கள் சிறு சிறு காரியத்திற்கும் மிகவும் பயப்படுவார்கள். உதரணமாக, எதாவது துர்செய்தியை கேள்விப்படும்போது அல்லது தினசரி நாளிதழில் இருக்கும் விபத்துக்களை பார்க்கும் போது அது தனக்கும் நேர்ந்து விடுமோ என்று எல்லா காரியத்திற்கும் பயபடுகிரவர்கள்.

இரண்டாவது வகை: குழப்ப குணம் உடையவர்கள். இவ்வகை மனிதர்கள் எதற்கெடுத்தாலும் கலக்கம் மற்றும் குழப்பம் அடைவார்கள். உதரணமாக, எதாவது ஒரு காரியத்தை செய்து விட்டு "ஐயோ இதை இப்படி செய்திருக்கலமோ? அல்லது அப்படி செய்திருக்கலமோ?" என்று தடுமாறிகொண்டிருப்பார்கள்.

மூன்றாவது வகை : யதார்த்த உலகை மறந்து கற்பனை உலகில் இருப்பவர்கள். இவ்வகை மனிதர்கள் எப்பொழுதும் கற்பனை உலகில் மிதந்துக்கொண்டிருப்பார்கள். உதரணமாக, இவர்கள் "அந்த நிலாவை பாருங்கள் அது என்னை பார்த்து சிரிக்கிறது" "மேகங்கள் எல்லாம் என்னை பார்க்க வருகிறது" "எனக்கு சிறகுகள் இருந்தால் நான் பறந்து போய் சந்திரனில் வசிப்பேன்" என்று பேசிக்கொண்டிருப்பார்கள்.

நான்காவது வகை : தனிமை உணர்வுமிக்கவர்கள். இவ்வகை மனிதர்களை மிகப்பெரிய தலைவர்கள் கலந்துக்கொள்ளும் மிகப்பெரிய விழாவில் அழைத்து சென்றாலும் இவர்கள் அதையெல்லாம் விரும்பாமல் எங்காவது ஒரு மூலையில் போய் தனிமையாக உட்கார்ந்து கொண்டு, அங்கு நடக்கும் காரியங்களை உன்னிப்பாக கவனித்து கொண்டு அதைப்பற்றி சிந்தித்து கொண்டிருப்பார்கள். இவர்கள் மற்றவர்களுடன் இயல்பாக நெருங்கிப்பழகுவதில்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார்கள். அடுத்த வீட்டில் இருப்பவர்கள் யார் என்றுக்கூட இவர்களுக்கு தெரியாது.

ஐந்தாவது வகை : மற்றவர்களின் செல்வாக்கிற்கு உடன்பட மறுப்பவர்கள். இவ்வகை மனிதர்களை எவ்வளவு விலைக்கொடுத்தும் வாங்கமுடியாது. உதரணமாக, யாராவது செல்வாக்கு மிகுந்தவர்கள் இவர்களிடம் வந்து நான் யார்தெரியுமா என்று கேட்டால் "நீ யாராய் இருந்தால் எனக்கென்ன" என்று தன் வழியில் இருப்பவர்கள்.

ஆறாவது வகை : எப்பொழுதும் எதிலேயும் பற்றில்லாமல் இருப்பவர்கள். இது ஒரு துறவு மனப்பான்மை. இவர்களுக்கு எதிலேயும் ஒரு இடுபாடு இருக்காது. உதரணமாக, இவர்களிடம் ஒரு விலையுயர்ந்த பொருளை கஷ்டப்பட்டு தேடி கண்டுபிடித்து நீங்கள் வாங்கிக்கொடுத்தாலும் அதை பற்றியெல்லாம் பெரிதாக எண்ணாமல் இருப்பார்கள்.

எழாவது வகை : மற்றவர்களின் துன்பத்தை தன்னுடைய துன்பமாய் நினைத்துக்கொண்டு கவலைபடுகிறவர்கள். இவர்களை மகாத்மாக்கள் என சொல்லலாம். உதரணமாக, இவர்கள் 'தான் வேறு அடுத்தவர்கள் வேறு என்று நினைப்பதில்லை'. அடுத்தவர்களுக்கு ஒரு துன்பம்வந்தாலும் இவர்களால் சும்மா இருக்க முடியாது.

இப்படி எழு வகையான மனிதர்கள் இந்த உலகத்தில் வாழ்ந்துவருகிறார்கள். அதனால் ஒருவரை ஒருவர் நாம் தாங்கி , மதித்து, அன்பு செலுத்துவது மட்டுமல்லாமல், இந்த ஏழு வகை மனிதர்களில் நாம் எந்த வகையில் வருகிறோம் என்று நாம் நம்மை அடையாளம் கண்டுபிடித்து, அதற்கேற்றாற்போல் நாம் வாழ்ந்தால் வாழ்கையை ஜெயித்திடலாம்.

"ஒருவருக்கொருவர் ஆறுதலாய் இருங்கள். மேலும் நீங்கள் செய்துகொண்டிருப்பது போல ஒருவரையொருவர் பலப்படுத்துங்கள். சகோதர சகோதரிகளே! உங்களோடு கடுமையாய் உழைப்பவர்களுக்கு மதிப்பளியுங்கள். கர்த்தருக்குள் அவர்களே உங்கள் தலைவர்கள். ஆத்தும அளவில் அவர்களே உங்களுக்கு வழிகாட்டுகிறார்கள். அவர்கள் செய்துகொண்டிருக்கிற செயலுக்காக அவர்களை அன்போடு மதியுங்கள். ஒருவருக்கொருவர் சமாதானமாய் வாழுங்கள். அஞ்சுகிறவர்களை உற்சாகப்படுத்துங்கள். பலவீனமானவர்களுக்கு உதவுங்கள். எல்லாரிடமும் பொறுமையாய் இருங்கள். ஒருவரும் தீமைக்குத் தீமை செய்யாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் எப்பொழுதும் நன்மை செய்துகொள்ளவும் எல்லாருக்கும் நன்மை செய்யவும் முயலுங்கள்."
1 தெசலோனிக்கேயர் 5: 11 to 15



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக