பக்கங்கள்

வியாழன், 22 நவம்பர், 2012

தரிசு நில சாகுபடி


தரிசு நில சாகுபடி


ஏராளமான விவசாய விளைநிலங்கள் விலை நிலங்களாக மாற்றபட்டுகொண்டு இருக்கும்போது, பயனற்றதென கிடக்கும் தரிசு நிலங்களிலும் நம்மால் சிறப்பாக சாகுபடி செய்யமுடியும் என விவசாயிகளை ஊக்கபடுத்தி ஆலோசனை சொல்லி வழிநடத்தி வருகிறது தமிழ்நாடு செய்திதாள் காகித நிறுவனத்தின் கிழே இயங்கும் கரூரில் உள்ள வன தோட்ட துறை.

ஒப்பந்த முறை சாகுபடியில் விவசாயிகள் நல்ல லாபம் பெற மிக குறைந்த அளவு நீர் தேவைகளே உள்ள சவுக்கு ,தைல மற்றும் மலைவேம்பு,குமிழ் மாற கன்றுகளை வழங்குகிறார்கள்.உதாரணமாக சவுக்கு சாகுபடியை எடுத்து கொண்டால், சவுக்கு 3 அல்லது 4 வருட பயிர்.கடும் வறட்சியை தாங்ககுடியது,4 வருடத்தில் ஏக்கருக்கு சுமார் 60 முதல் 80 டன் வரை மகசூல் பெற முடியும், இப்போதைய மார்க்கெட் விலை டன்னுக்கு சுமார் 2500 வரை கிடைக்கிறது.எப்படி பார்த்தாலும் ஏக்கருக்கு சுமார் 1 .5 லட்சம் ருபாய் மிக எளிதாக எவ்வித முதலிடும் இன்றி பெற முடியும். மலை வேம்பு ,குமிழ் போன்றவைகள் மூலம்,சவுக்கை விட மிக அதிக லாபம் பெறமுடியும்.இது பற்றி மேலும் தகவல்கள் பெற பின்வரும் முகவரியை தொடர்பு கொள்ளவும்.

வன தோட்டதுறை,
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம்,
காகிதபுரம் ,கரூர் -639131

மொபைல் : 9442591412 ,9442591417

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக