பக்கங்கள்

வெள்ளி, 9 நவம்பர், 2012

ஜெபம் ஓர் அறிமுகம்


ஜெபம் ஓர் அறிமுகம்

அன்பானவர்களே இந்த உலகில் நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், யார் உங்களைக் கைவிட்டிருந்தாலும், நீங்கள் மற்றவர்களிடம் எதிபார்த்த அன்பு பாசம், மற்றும் உலகத்தேவைகள் போன்றவைகள் கிடைக்காமல் போனாலும், கவலைப்படாதிருங்கள். நீங்கள் கடவுளிடம் கேட்டால் கட்டாயம் தருவார். கடவுளிடம் கேட்பது என்பது ஜெபம் எனப்படும் அதைக்குறித்து இங்கே காண்போமா?
ஜெபம் என்றால் என்ன?

ஜெபம் என்பது தகப்பனுக்கும் மகனு(ளு)க்கும் உள்ள உறவு. ஒரு மகன்(ள்) அப்பத்திற்காக்க் கேட்கிறான். அவன் தகப்பன் அதை மகனுக்குக் கொடுக்கிறான் அது போல கடவுளிடம் ஜெபிப்பதும், அதற்குறிய பலனைப் பெற்றுக்கொள்வதும் தகப்பன் – மகன்(ள்) உறவின் அடிப்படையில் தான். (ஆதாரம்: மத்தேயு 7:9-11)
ஜெபம் செய்வது எப்படி?

ஜெபத்திற்கு கட்டாயம் பலன் உண்டு. மனிதர்கள் தங்கள் ஜெபங்களிலே உண்மையுள்ளவர்களாயும், சிரத்தை உள்ளவர்களாயும், விடாமுயற்சியும் உள்ளவர்களாயும் இருந்தால், அதற்கு பலன் இருந்தே தீரும். (ஆதாரம்:மத்தேயு 6:6)
எப்படி ஜெபிக்கக் கூடாது?

கோபமுள்ள ஆவியோடும், கட்டுப்பாடற்ற மட்டு மரியாதையற்ற வார்த்தைகளோடும், ஒப்புரவாகாத இருதயத்தோடும், பிறரை மன்னியாத சுபாவத்தோடும், கடவுளை நோக்கி ஜெபிக்கிறவனின் முயற்சியும் நேரமும் வீணே.(ஆதாரம்:மத்தேயு5:21-24)
இயேசு நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோஅவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார். (மத்தேயு21:22)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக