பக்கங்கள்

செவ்வாய், 15 ஜனவரி, 2013

குடும்பத்தில் மனைவியின் பங்கு

குடும்பத்தில் மனைவியின் பங்கு

இன்று பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடத்திட்டம் வகுத்துவிட்டு, இந்த கருத்துக்களை தெரிந்து கொள்வதன் மூலம் அவர்களுக்கு என்ன பயன் கிடைக்கும் ? (What Is In It For Me -WIIIFME) என்பதையும் முகப்பு பக்கங்களில் தெரிவித்து இருப்பர். அதுபோல , வேதத்தை நாம் கற்கும் போதும் , அது நமக்கு பயன் தரும் அடிப்படையில் ஒரு WIIIFME யுடன் அமைக்கப்பட்டுள்ளது.
வேதத்தின் வெளிச்சத்திலே உங்கள் வாழ்கையின் பாதையை சீர்தூக்கிப் பாருங்கள். 'உம்முடைய வசனம் என் கால்களுக்கு தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது' என்று தாவீது சங்கீதத்தில் கூறுவதை நாம் வாசித்திரிப்போம். ஆனால் பெரும்பான்மையான நேரங்களில் போதகத்தை கேட்பதோடு நின்று விடுகிறோம். அல்லது வாசித்த வேத பகுதியை நம்முடைய வாழ்கையில் நடைமுறை படுத்த தேவையான முயற்சிகளை எடுக்க தவறி விடுகிறோம். இன்று குடும்பங்களில் மனைவியின் பங்கு குறித்து வேதத்தில் தேவன் என்ன கூறியுள்ளார் என்று பார்போம். பின்னர் அவ்வசனங்களுக்கு நம்முடைய பதில் என்னவென்றும் சிந்திப்பது நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பிரயோஜனமாக இருக்கும். தேவன் நமக்கு உதவி செய்வாராக.
 தனிப்பட்ட வாழ்க்கை
 1. I தீமோத்தேயு 2:10 - தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும் , தேவ பக்தியுள்ளவர்களென்று சொல்லிகொள்ளுகிற ஸ்திரிகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்.
• என்னுடைய உடை தேவ பக்தியுள்ள பெண்ணாக என்னை உலகிற்கு காட்டுகிறதா?
• என்னுடைய வெளிப்புற தோற்றம் அடக்கமாக, ஒழுக்கமாக மற்றவர்கள் மதிக்கத்தகும் வகையில் உள்ளதா?
2. I பேதுரு 3:3,4 - புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும், அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது ;
• என்னை காண்கிறவர்கள் உள்ளான அலங்காரத்தை காண்கிறார்களா ? புறம்பான ஆடம்பரத்தை காண்கிறார்களா ? ஆவியின் கனிகளினால் நிறைந்த நன்றியுள்ள இருதயம் தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது .
• ஒரு நாளில் நாம் எவ்வளவு நேரம் ஆவிக்குரிய காரியங்களிலும், வெளிப்புற அழகிற்கும் செலவு செய்கிறோம் ?
3. I தீமோத்தேயு 2:11 -ஸ்திரியானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளகடவள்
பவுல் தன்னுடைய உடன் ஊழியனான தீமோத்தேயுவிற்கு, தேவனுடைய வீட்டில் விசுவாசிகள் நடக்க வேண்டிய வகையை குறித்து முதலாம் கடிதத்தை எழுதுகிறார். (I தீமோத்தேயு 3:15) எபேசு பட்டணத்தில் இருந்த சபை, பலவிதமான வேற்று உபதேசங்களை பின்பற்றி வந்தது. அங்கே ஊழியம் செய்ய அனுப்பிவிடப்பட்ட தீமோத்தேயுவிற்கு பவுல் இந்த நிருபத்தை எழுதுகிறார். (1தீமோத்தேயு 3,4 ) இந்த எபேசு சபையின் ஸ்திரிகளில் சிலர், பொய்யான உபதேசங்களுக்கு செவிசாய்த்து, வழிவிலகி சென்றனர். (2 தீமோத்தேயு 3:6,7 ; 4:1-3) அமைதலுள்ள ஆவியோடு மாயமற்ற உபதேசத்திற்கு செவிகொடுக்காமல், போதனை செய்கிறவர்களோடு தர்க்கித்தனர். எனவே பவுல், ஸ்திரிகள் நற்போதனைகளை சாந்தமாய் கேட்டு , இருதயத்தில் ஏற்றுக்கொண்டு, அதன்படி அமைதலான ஜீவியம் தங்கள் குடும்பங்களில் காணப்பட கற்றுக்கொள்ளகடவர்கள் எனக் கூறுகிறார்.
• இன்று நாம் சபையின் செய்திகளை அமைதலோடு கற்றுகொள்கிறோமா? மற்றவர்களுக்கு உபதேசிக்கிரவர்களாய் காணப்படுகிறோமா?
• அல்லது,சபையின் நடைமுறைகளை பிறரிடம் விமர்சிக்கிறோமா?
• நம்முடைய ஜீவிதம் அமைதலாய் உள்ளதா?
4. I தீமோத்தேயு 6:7, 8 - போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை , இதிலிருந்து ஒன்றும் கொண்டுபோவதுமில்லை
• இன்று என் வாழ்க்கையின் எந்த இடத்திலே 'போதும்' என்று இருக்க வேண்டும்?
• அளவுக்கு அதிகமாக, அல்லது வசனத்திற்கு புறம்பாக எதை நான் விரும்புகிறேன்?
குடும்ப வாழ்க்கை
1. எபேசியர் 5:23, 24 - கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுப் போல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்;...ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்த புருஷர்களுக்கு எந்த காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்.
• குடும்பத்தின் தலைவன் கணவர். அது தேவனால் அவருக்குக் கொடுக்கப்பட்ட கடமை. என்னுடைய கணவரை குடும்பத்தின் தலைவராக காண்கிறேனா? அவர் என்னை வழி நடத்த அனுமதிக்கிறேனா?
• சபையானது கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிவது போல நான் என் கணவருக்கு கீழ்ப்படிகிறேனா?
• என்னுடைய எண்ணங்களிலும், செய்கையிலும் கணவருக்கு கீழ்ப்படிகிறேனா?
2.எபேசியர்5:33"... மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள்"
• நான் என் கணவரை மதிக்கிறேன் , அவர் மீது மரியாதை வைத்துள்ளேன் என்பதை அவர் உணர்ந்துள்ளாரா?
• என்னுடைய வார்த்தையினாலும், நடக்கையினாலும், ஆலோசனைகளினாலும் மற்ற பெண்கள் தங்கள் கணவரை மரியாதையோடு காண மாதிரியாய் உள்ளேனா?
3. I தீமோத்தேயு 2:15-"அப்படியிருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால், பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள்.
• பிள்ளைகளை பெற்று, தேவ பக்தியுள்ளவர்களாய் வளர்ப்பதே தேவன் எனக்கு கொடுத்த பெரிய பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்பட்டது உண்டா?
• என்னுடைய நடக்கையிலும், பேச்சிலும், செயலிலும் பிள்ளைகளுக்கு நல்ல உதாரணமாக இருக்கின்றேனா?
4.II தீமோத்தேயு 3:15-"கிறிஸ்து இயேசுவை பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக் கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயது முதல் அறிந்தவனென்றும் உனக்கு தெரியும்"
• என்னுடைய பிள்ளைகளுக்காக தினமும் ஜெபிக்கின்றேனா?
• அவர்களுடைய இருதயத்தில் தேவ வார்த்தையை விதைக்க உழைக்கின்றேனா?
• சுய வேலைகளை பாராமல், பிள்ளைகளை சபைக்கு அழைத்து வந்து, தேவ வார்த்தைகளை கேட்கச் செய்கிறேனா?
• சபையின் விசுவாசிகளோடு பிள்ளைகள் ஐக்கியமாக உள்ளார்களா?
• தேவனையும் அவருடைய சத்தியத்தையும் கேட்டு புரிந்துகொள்கிறர்களா?
வீடு
1. நீதிமொழிகள் 14:1 -" புத்தியுள்ள ஸ்திரி தன் வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரியோ தன் கைகளினாலே அதை இடித்துப்போடுகிறாள்"
• இந்த இரண்டு ஸ்திரிகளில் யாருடைய குணம் என்னிடம் உள்ளது. என்னுடைய நோக்கமும் செயலும் எதை நோக்கி செல்கிறது?
2.நீதிமொழிகள் 31:27 -"அவள் சோம்பலின் அப்பத்தைப் புசியாமல், தன் வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாயிருக்கிறாள்"
• என்னுடைய வீட்டின் காரியம் கிரமமாக உள்ளதா?
• நேர்த்தியான , தூய்மையான வீடாக உள்ளதா?
• கர்த்தர் விரும்பாத பொருட்கள் வீட்டிலே உண்டா ?
• என்னுடைய வீட்டில் நான் கவனிக்க வேண்டிய முக்கியமான காரியங்கள் என்னென்ன?
3. I தீமோத்தேயு 5:14-"...விவாகம் பண்ணவும், பிள்ளைகளை பெறவும், வீட்டை நடத்தவும் ..."
• வீட்டின் காரியத்தை குறித்து தேவன் கொடுத்த திட்டம் இதுவே - இதை குறித்து என்னுடைய எண்ணம் என்ன? வீட்டுவேலைகளை நான் பொறுப்புடன் செய்கிறேனா?
• தேவன் விரும்பும் வண்ணம் வீட்டை நிர்வாகிக்க விருப்பம் உண்டா?
சமுதாயம்
I தீமோத்தேயு 5:10-"பிள்ளைகளை வளர்த்து, அந்நியரை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக்கழுவி, உபத்திரப்படுகிறவர்களுக்கு உதவி செய்து, சகலவித நற்கிரியைகளையும் ஜாக்கிரதையாய் நடப்பித்து ,இவ்விதமாய் நற்கிரியைகளைக் குறித்து நற்சாட்சி பெற்றவளுமாயிருந்தால் ..."
• நம்முடைய வீடு ஊழியங்களுக்கு திறந்து கொடுக்கப்படுகிறதா?
• நம்மை சுற்றி உள்ளவர்கள் தேவனை அறிய வாய்ப்புள்ளதா?
• சபையின் ஊழியங்களில் சகோதரிகளோடும், பிள்ளைகளோடும் பங்கு கொள்கிறேனா?
• மற்ற விசுவாசிகளின் தேவைகளை அறிந்து வாழ்கின்றேனா? அவர்களுக்கு என்னால் ஆறுதல் உண்டா?
மேன்மையான நோக்கம்
1.தீத்து 2:4, 5-"தேவவசனம் தூசிக்கப்படாதப்படிக்கு பாலிய ஸ்திரிகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும் , வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிருக்கும்படி ,நற்காரியங்களை போதிக்கிறவர்களுமாயிருக்கவும் முதிர்வயதுள்ள ஸ்திரிகளுக்கு புத்திசொல்லு. "
• மேற்கூறிய வசனத்தின் வரிசையின் படி நான் விருப்பம் கொள்கிறேனா? அல்லது, வேறு ஒரு ஒழுங்கு முறையில் வாழ்க்கையின் திட்டங்களை தீட்டுகிறேனா?
• என்னுடைய குடும்பத்தை நேசித்து அவர்களது தேவைகளை சந்திக்க போதுமான அளவு முயற்சி செய்கிறேனா?
• என்னிலே சுயநலமற்ற , தியாகமான, சேவிக்கிற அன்பின் மாதிரியை என் கணவரும், பிள்ளைகளும் காண்பார்களா?
• நான் ஆவியிலே எளிமை, அன்பு, சுய அடக்கம் கொண்டவளாக உள்ளேனா?
• என்னுடைய வாழ்கை வேதம் சித்தரிக்கும் குணசாலியான ஸ்திரிபோல உள்ளதா?
மேற்கண்ட வசனங்கள் பெண்களை குறித்ததான தேவனுடைய இருதயத்தை வெளிப்படுத்துகிறது. அதோடு தொடர்புடைய கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளித்திருப்பீர்கள். நாம், எங்கு குறைவு பட்டு காணப்படுகிறோமோ அங்கு தேவ ஆவியானவர் உதவிக் கொண்டு சரி செய்து கொள்வோம். பின் ஒரு நாளில் நம்முடைய ஆண்டவரின் சந்நிதானத்தில் மாசற்ற பிள்ளைகளாய் நிற்க வழி செய்வோம்.

கர்த்தரை கனப்படுத்தும் குடும்பம்

கர்த்தரை கனப்படுத்தும் குடும்பம்

தாய்மார் கற்றுக் கொடுக்க வேண்டிய சில நல்லொழுக்கங்கள்
தேவ பக்தி என்பது பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு தானாக வருவது கிடையாது. அதிக ஜெபத்தொடும் கவனத்தோடும் விசுவாசியான பெற்றோர்கள் நல்லொழுக்கங்களை உருவாக்க ஏற்ற பயிற்சி கொடுத்து முயற்சி எடுக்கும் போதுதான் பிள்ளைகள் தேவ பக்தியுள்ளவர்களாய் நடக்க முடியும். எனவே தான் பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியில் நடத்து என்று கர்த்தரின் வசனம் சொல்லுகிறது. சிறு வயது முதல் பிள்ளைகளுக்கு நல்லொழுக்கங்களை கற்றுக் கொடுப்பது தாயின் முக்கிய கடமையாகும்.
ஜெபத்தோடு கர்த்தரிடம் ஞானத்தைப் பெற்று இதைச் செய்யும் பொது ஏற்ற காலத்தில் நம் பிள்ளைகள் ஒலிவ மர கன்றுகளைப் போல் கர்த்தருக்கு மகிமையைக் கொண்டு வருவார்கள்.
1. வேதம் வாசித்து ஜெபிக்க கற்றுக் கொடுப்பது:
உபாகமம் 6:6,7; சங்கீதம் 1:2, யோசுவா 1:8, I தீமோத்தேயு 3:15 : வேத வசனத்தை கருத்தாக போதித்து, அதைக் குறித்து எப்போதும் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று உபாகமத்தில் வாசிக்கிறோம். குடும்ப ஜெபங்களிலும் மற்றும் நமக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களிலும் வேதாகமக் கதைகளை இரண்டு வயது முதல் சொல்லி கவனமாய் கேட்கும்படி செய்ய வேண்டும். அது அவர்கள் காதுகளில் தொனித்துக் கொண்டும்,இருதயத்தில் பதிக்கப்பட்டதுமாய் இருக்கும்படி, அவர்கள் வயதிற்க்கேற்ப,புரியும்படி எளிய முறையில் கற்றுக் கொடுக்க வேண்டும்.
சாமுவேல், தாவீது,தானியேல் மற்றும் சகேயு இவர்களைப் பற்றிய சிறிய பல்லவிகளைப் பாடும்படி கற்றுக் கொடுத்து பின் அதற்கேற்றக் கதைகளை மனதில் பதியும்படி எழுத கற்றுக் கொண்ட பின் அவர்களோடு சேந்து அந்த கதைகளைப் படிக்கலாம் ஒரு சிறிய வசனம் தினமும் மனப்பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும். வேதம் வாசித்தப் பின் ஜெபிப்பது மிக அவசியம். எவ்வாறு ஜெபிப்பது என்பதை கற்றுக் கொடுத்து ஜெபிக்க செய்ய வேண்டும் . இது அனுதினம் கொடுக்க வேண்டிய ஆவிக்குரிய பயிற்சி . அன்றாட வாழ்க்கையிலும் வேதத்தில் படிக்கும் சத்தியங்களைப் பொருத்தமான நேரத்தில் சம்பந்தப்படுத்தி பேசி புரிந்து கொள்ளும்படி செய்ய வேண்டும்.
2. ஒழுங்கு:
ஒவ்வொரு கிறிஸ்தவ குடும்பத்திற்கும் தூணாக நிற்பது ஒழுங்கு. நம் தேவன் ஒழுங்கை விரும்புகிறார் . சகலமும் ஒழுங்கும் கிரமமுமாய் செய்யப்பட வேண்டும் என்று பவுல் அப்போஸ்தலன் போதிக்கிறார் . நாம் எடுக்கும் ஒழுங்கு நடவடிக்கை, வேதத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்.கர்த்தருடைய பிரதிநிதியாய் அவருக்கென்று பிள்ளைகளை கொடுக்க ஒழுங்கு அவசியம் . பிள்ளைகளை நேசிப்பதினால் ஒழுங்கு வேண்டும். தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளை தாய்க்கு வெட்கத்தை உண்டு பண்ணும். பிள்ளைகளை ஒழுங்குபடுத்தும் போது நற்பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுக்கிறோம்.
சகோ பில்லி கிரகாமின் மனைவி ரூத் கிரகாம் சொல்வது என்னவென்றால், பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய அத்தனை நல்லொழுக்கங்களும் அதற்குரிய பயிற்சியும் பத்து வயதுக்குள்ளாகவே கற்றுக் கொடுக்க வேண்டும்.சிறுவர்களாய் இருக்கும் போது நன்மை தீமை இன்னதென்று தெரிந்து கொள்ள வேண்டும்.ஒழுங்கு இருக்கிற இடத்தில் தான் பாதுகாப்பு இருக்கும்.தன் எல்லையை மீறாமல் என்னும் வளையத்திற்குள் பிள்ளைகள் வளரும் போது தீமையினின்று காக்கப்படுகிறார்கள் . பொல்லாங்கன் அவர்களைத் தொட முடியாது. தாயும் தகப்பனும் சேர்ந்து ஜெபித்து பிள்ளைகளை ஒழுங்குபடுத்தும் ஞானத்தைத் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
3. கீழ்ப்படிதல்:
(1 சாமுவேல் 15:22) நற்குணங்கள் உருவாக அடிப்படைத்தேவை கீழ்ப்படிதல் .
லியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதல் உத்தமம் . பிள்ளைகள் இரண்டு வயதுக்குள் கீழ்ப்படிதலைக் கற்றுக் கொள்ள வேண்டும்.ஏன், எதற்கு என்று கேள்வி கேட்காமல் கீழ்ப்படிய வேண்டும். சொன்னவுடனே கீழ்ப்படிய வேண்டும்.மனப்பூர்வமாக சந்தோசமாக பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டும்.முறுமுறுக்காமல் கீழ்ப்படிய வேண்டும். அரை மனதோடு கீழ்ப்படியக் கூடாது.
பெற்றோரைக் கனம் பண்ணுவதற்கு அடையாளம் கீழ்ப்படிதல். வீட்டில் கீழ்ப்படியக் கற்றுக் கொண்ட பிள்ளை சபையிலும்,பள்ளியிலும்,சமுதாயத்திலும் கீழ்ப்படிகிறவர்களாக இருப்பார்கள். அதிகாரத்தை எதிர்க்கிறவர்களாக இருக்க மாட்டார்கள் .
4. வேலை செய்யக் கற்றுக் கொடுக்க வேண்டும்:
(நீதி 10:4, 2, தெச. 3:10, நீதி.6.6) சோம்பேறித் தனத்திற்கு இடங்கொடாமல் சுறுசுறுப்புள்ளவர்களாய் இருக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்.தினந்தோறும்சில சிறிய வேலைகளை அவரவர் வயதிற்கு ஏற்ப தாய்க்கும், தகப்பனுக்கும்உதவி செய்யும்படிக் கற்றுக் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது சுயமரியாதையும் , பொறுப்பும் உள்ள பிள்ளைகள் ஆவார்கள்.நன்றாக செய்த வேலையை பாராட்ட வேண்டும்.குறைகளை அன்போடு எடுத்துச் வேண்டும்.
குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வேலையை செய்ய வேண்டும்.பிறர் தனது வேலையைச் செய்வார்கள் என்று நினைக்கக் கூடாது. இப்பழக்கம் பிற்காலத்தில் அவர்கள் வாழ்க்கைக்கு உதவும். உன் கைக்கு நேரிடுவது எதுவோ அதை உன் முழு பெலத்தோடு செய் என்கிற வசனத்தை ஞாபகப்படுத்தி பிள்ளைகளை உற்சாகப்படுத்த வேண்டும்.(பிரசங்கி 9:10)
5.தேக ஆரோக்கியத்திற்க்கேற்ற நற்பழக்கங்களை ஒழுங்காக கடைப்பிடித்தல் :
தினந்தோறும் காலையிலும் இரவிலும் பல் துலக்கி முகம் கழுவுவது, தினந்தோறும் குளிப்பது, வெளியே போய் வந்தபின் முகம்,கை கால்,கழுவுவது சாப்பிடும் முன் ஆகாரத்திருக்கு நன்றி சொல்லி ஜெபிப்பது,நகங்களை அதிகம் வளர விடாமல் அவ்வப்போது வெட்டி சுத்தப்படுத்துதல், குளித்த பின் அழுக்கு துணிமணிகளை குளிக்கும் அறையில் தொங்கவிடாமல் துவைக்கும் துணிகளுக்குக் குறிப்பிட்டஇடத்தில் வைப்பது, காகிதத் துண்டு, குப்பையை குப்பைத் தொட்டியில் போடுவது, பிறருடைய பொருட்களை அவர்கள் அனுமதியின்றி எடுத்து உபயோகிக்கக் கூடாது இது போன்று நற்பழக்கங்களை மிகச் சிறிய வயது முதற்கொண்டே கடைப்பிடிக்கும்படி செய்ய வேண்டும்
6.பணத்தை சரியான முறையில் உபயோகிக்கக் கற்றுக் கொடுத்தல் :
பிள்ளைகள் மிகவும் சிறியவர்களாய் இருக்கும்போது காசு கையில் கொடுத்து சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவற்றை தங்கள் இஷ்டப்படி வாங்கி சாப்பிட அனுமதிக்கக் கூடாது. அவர்களுக்குத் தேவையான யாவையும் பெற்றோரே வாங்கி கொடுப்பது நல்லது.அவர்களாகவே போய் வாங்கும்போது சுத்தமில்லாத , ஈ மொய்த்த பண்டங்களை வாங்கி பல வியாதிகள் வரக் கூடும்.மேலும்,சிறிய வயதில் பணத்தை எவ்வாறு உபயோக்கிப்பது என்பதும் அவர்களுக்கு தெரியாது. ஆனால் ஒரு குறிப்பிட்ட வயது வரும்போது பேருந்து செலவு போன்ற அத்தியாவசிய காரணமாக பணத்தை அவர்கள் கையில் கொடுக்க நேரிடலாம்.எனவே, பணத்தை எவ்வாறு செலவழிப்பது, எவ்வாறு சேமிப்பது, எவ்வாறு ஏழை எளியவருக்குக் கொடுத்து உதவுவது என்பதைக் கற்றுக் கொடுப்பது அவசியம்.கர்த்தருக்கும் ஊழியங்களுக்கும் தாராளமாய் கொடுக்க பழக்குவிக்க வேண்டும்
7.ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நடக்க கற்றுக் கொடுத்தல்:
"கனம் பண்ணுவதில் முந்திக் கொள்ளுங்கள்" என்கிற போதனையை சிறு வயது முதல் கற்றுக்கொடுக்க வேண்டும்.பெற்றோர், சகோதர, சகோதரிகள், தாத்தா, பாட்டி மற்றும் முதியோர் பெரியோர் அனைவரிடமும் மரியாதையுடன் அன்பாய்ப் பழகவேண்டும். பெரியோருக்கு முன்பாக எழுந்து நின்று கனம் பண்ணுதல், வணக்கம் செய்தல், மரியாதையுடன் உட்காருவது போன்றவை அவசியம். கற்றுக் கொள்ள வேண்டியவை. 'நன்றி ', ' தயவுசெய்து ',' வணக்கம் ' போன்ற மரியாதைக்குரிய வார்த்தைகளை மிகச் சிறிய குழந்தைகளுக்கே கற்றுக் கொடுக்க வேண்டும்.
8.தங்கள் உடைமைகளைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளக் கற்றுக் கொடுத்தல் வேண்டும்.
சிறிய குழந்தைகள் இயல்பாக சுய நலமுடையவராய் இருப்பார்கள் . இதைத் தவிர்க்க தாயானவள் பிள்ளைகள் தங்கள் விளையாட்டுப் பொருள்,உணவு இவற்றை தன் சகோதர சகோதரிகளோடு பகிர்ந்து கொடுக்க உற்சாகப்படுத்த வேண்டும். சண்டை போடுவதையோ ,ஒருவரையொருவர் அடிப்பதையோ தவிர்த்து அன்பாகப் பழகச் செய்ய வேண்டும். சிறு வயதில் எல்லோரோடும் பகிர்ந்து கொள்ளக் கற்றுக் கொண்டால் பெரியவர்களான பின் எல்லோரோடும் சுமுகமாக பழக முடியும் . ஒருவரையொருவர் மன்னிக்க, சகித்துக் கொள்ள தாய் தான் அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்.
அருமை தாய்மாரே ,மேற்கூறிய நற்பண்புகள் நம் குழந்தைகளிடம் குழந்தைகளிடம் உருவாக அனுதினமும் ஜெபித்து செயல்படுவோமாக .

எல்லோரும் அவளை புகழுகிறார்கள்!

எல்லோரும் அவளை புகழுகிறார்கள்!

உலகில் வாழ்கிற நாம் எப்படிபட்டவர்களாய் வாழ வேண்டும் என்பதற்காக பவுல் கலாத்தியர் நிருபத்தில் 5ம் அதிகாரம் 22,23 வசனங்களில் எழுதியிருப்பதை படிப்போமா?

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம். இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.

இப்படிப்பட்ட ஆவியின் கனிகளை பெற வேண்டிய- பெண்களாகிய நாம் வாழ்வில் மிகவும் பொறுப்பான இடத்தில் இருக்கிறோம்.

கணவர், பிள்ளைகள், உறவினர், பெற்றோர் யாவரையும் பராமரிக்கும், வீட்டு வேலைகளை கவனித்துக்கொள்ளும் நற்பணியில் நாம் இருக்கிறோம்.

பெண்களாகிய நாம் பெலவீன பாண்டங்கள்தான்-
ஆனாலும், இயேசப்பா நம்மை ஆவியின் கனிகளை பெற்று நல்வாழ்வு வாழ சொல்கிறார்.

நாம் மனமகிழ்ச்சியோடு அனைவருக்கும் செய்யும் கடமைகளை செய்யும்போது, நம் பெலவீனமுள்ள சரீரத்தை பெலமுள்ளதாக்குகிற தேவனாகிய கர்த்தர் நம்மோடிருந்து நம்மை பெலப்படுத்துகிறார்.

கிறிஸ்துவுக்குள் வாழும் நம் அனைவரும் நீதிமொழிகள் 31ஆம் அதிகாரத்தில் சொல்லிய ஸ்திரியைபோல இருக்க வேண்டும்.

அவள்-
அதிகாலை எழும்பி வேலை செய்கிறாள்.

தூரத்திலிருந்து ஆகாரத்தை கொண்டு வருகிறாள்.

இருட்டோடே எழுந்து தன் வீட்டாருக்கு ஆகாரம் கொடுக்கிறாள்.

தன் வேலைகாரிகளுக்கு படியளக்கிறாள்.

வயலை விசாரித்து வாங்குகிறாள்.

திராட்சத்தோட்டத்தை நாட்டுகிறாள்.

சிறுமைப்பட்டவர்களுக்கு தன் கையை திறந்து ஏழைகளுக்கு தன் கரங்களை நீட்டுகிறாள்.

தன் வாயை ஞானம் விளங்க திறக்கிறாள். தயையுள்ள போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது.

அவள் சோம்பலின் அப்பத்தை புசியாமல் தன் வீட்டு காரியங்கள் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாய் இருக்கிறாள்.

அவள் பிள்ளைகள் எழும்பி அவளை பாக்கியவதி என்கிறார்கள்.

அவள் புருஷன், அநேக பெண்கள் குணசாலிகளாய் இருந்தது உண்டு. நீயோ அவர்கள் எல்லாருக்கும் மேற்ப்பட்டவள் என்று அவளை புகழுகிறான்.

கர்த்தருக்கு பயப்படுகிற ஸ்த்ரியே புகழப்படுவாய்.

ஆம், கர்த்தருக்கு பயப்படுகிற ஸ்த்ரியே நீ புகழப்படுவாய்.

- Hepsibai Ambrose

அற்புத சுகம் தரும் இயேசு!

அற்புத சுகம் தரும் இயேசு!

இயேசு தன்னுடைய ஊழியப்பாதையில் அநேக அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தார். அநேக மக்கள் அவரிடம் வந்து நன்மை பெற்று சென்றார்கள். வியாதியஸ்தர்கள் அவரிடம் வந்து சுகம் பெற்று சென்றார்கள். அவற்றில் சிலவற்றை இங்கு பார்போம்.

வார்த்தையினால் சுகம்

நூற்றுக்கு அதிபதியாகிய ஒருவன் தன்னுடைய வேலைக்காரனில் ஒருவன் வியாதிப்பட்டு மரண அவஸ்தையாயிருந்தான். இயேசுவை பற்றி கேள்விபட்ட அந்த நூற்றுக்கு அதிபதி, தன்னுடைய வேலைக்காரன் சுகம் பெறுவதற்காக அவரை நோக்கி சென்றான்.

அவன் இயேசு தன் வீட்டில் பிரவேசிக்க தான் பாத்திரன் இல்லாதவன் என்று எண்ணி, "நீர் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும். அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்" என்றான். அநேக அதிகாரங்களை கொண்டவனாக அவன் இருந்தும், அவனது எண்ணங்களையும், அவன் வார்த்தைகளையும் கேட்ட இயேசு, "இஸ்ரவேலருக்குள்ளும் இப்படிப்பட்ட விசுவாசத்தை காணவில்லை" என்று சொல்லி அவனது வேலைக்காரனை தமது வார்த்தையினால் சுகப்படுத்தினார்.

ஆடையை தொட்டதால் சுகம்

இயேசுவும் அவருடைய சீடர்களும் பெரும் மக்கள் கூட்டத்தோடு போய் கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது ஒரு பெண் இயேசுவின் பின்னால் சென்று அவரது ஆடையின் தொங்கலை தொட்டாள். அதிலிருந்து வல்லமை பிறந்ததை அறிந்த இயேசு என்னை தொட்டது யார்? என்று கேட்டார். தெரியாது என்று அவருடனே கூட இருந்தவர்கள் கூறினார்கள்.
அப்போது அந்த ஸ்திரி, இயேசுவின் முன் வந்து விழுந்து தான் அவருடைய தொங்கலை தொட்டதையும், அவளுடைய பெரும்பாடு வியாதி அவளை விட்டு நீங்கியதையும் கூறினாள். இயேசுவின் ஆடையின் தொங்கலை தொட்டதன் மூலம் அவளின் பெரும்பாடு வியாதி அவளை விட்டு நீங்கியது.

இயேசு தொட்டதினால் சுகம்

நாயீன் ஊருக்கு இயேசு போனார். அவ்வூரின் வாசலருகே மரித்த ஒருவனை அடக்கம் செய்ய வந்தார்கள். அவன் தாய்க்கு ஒரே மகன். அவளோ ஒரு விதவை. அநேக ஜனங்கள் அவருடனே கூட வந்தார்கள். கர்த்தர் அவளை பார்த்து அவள் மேல் மனதுருகி அழாதே என்று சொல்லி பாடையின் அருகில் வந்து பாடையை தொட்டார். அவன் உயிரோடு எழுந்தான்.

- இவ்வாறு இயேசுவின் வார்த்தையின் மூலமாக, அவரை பற்றிகொள்வதன் மூலமாக, அவர் தொடுதலின் மூலமாக, இவ்வுலக பாடுகளில் இருந்து நாம் சுகம் பெற முடியும்.
- Hepsibai Ambrose

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து- என்னை காண்கிற தேவன்! என்னை காக்கிற தேவன்!

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து- என்னை காண்கிற தேவன்! என்னை காக்கிற தேவன்!

 "இயேசுவின் மகிமை"யை படித்து, இயேசுவை தன் இரட்சகராக ஏற்றுக்கொண்டேன் என்று - தஞ்சாவூர் மாவட்டம் "வல்லம்" அருகில் உள்ள "பிள்ளையார்பட்டி"யை சேர்ந்த அன்பு சகோதரர் எஸ்.எம்.ஞானசேகரன் சொல்கிறார்.

இவர், "இயேசுவின் மகிமை"க்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

"கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரருக்கு, தங்களின் "இயேசுவின் மகிமை" மூலம், 1991-ம் ஆண்டு இயேசுவை என் இரட்சகராக ஏற்றுக்கொண்டேன்.

"இயேசுவின் மகிமை"யில் முன்பக்க அட்டையில் போடப்பட்டு இருந்த "நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை. நான் கைவிடுவதும் இல்லை"- என்ற கர்த்தருடைய வார்த்தைதான் என்னை சந்தித்தது.

அன்றுமுதல் இன்றுவரை கர்த்தரையே சேவிக்கிறேன். என் தேவைகளை அவ்வப்போது கர்த்தர் தந்து வருகிறார்.
கர்த்தர் தம்முடைய வார்த்தையின்படியே இன்றுவரை என்னை கைவிடாமல் நடத்தி வருகிறார்.

எனக்கு பாடல் எழுதி பாடும் வரத்தையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தந்து இருக்கிறார்.

பல வருடங்களுக்கு முன்பாக "இயேசுவின் மகிமை"யில் "ஏழைக்கு பெலன் இயேசு" என்ற பாடலை வெளியிட்டு இருந்தீர்கள். இப்போதும் நான் ஒரு பாடலை எழுதி இருக்கிறேன்" - என்று குறிப்பிட்டு அந்த பாடலையும் தன்னுடைய கடிதத்தில் எழுதி, அனுப்பி இருக்கிறார்.

இயேசுவால் இரட்சிக்கப்பட்ட சகோதரர் ஞானசேகரன் எழுதி உள்ள அந்த பாடலை இனி படிப்போமா?

உமக்கே ஸ்தோத்திரம்
உன்னத தேவனே!
எமக்காக பரிந்து பேசும்
இயேசு ராஜனே! - (உமக்கே...)

பாவத்தை போக்கியே
பரிசுத்தம் ஆக்கும்
பாசத்தின் எல்லையே- உமக்கு
பலகோடி ஸ்தோத்திரம்! - (உமக்கே...)

நீதியின் பாதையில்
நித்தமும் நடத்திடும்
ஆதி அந்தம் இல்லாத
அருட்ஜோதியே ஸ்தோத்திரம்! - (உமக்கே...)

கன்மலையின் தேனினால்
களிப்புறச் செய்திடும்
தன்னிகர் இல்லாத
தலைவரே ஸ்தோத்திரம்! - (உமக்கே...)

காண்கிற தேவனாய்
காக்கிற தேவனாய் - இன்ப
கானானுக்கு வழிகாட்டும்
கர்த்தரே ஸ்தோத்திரம்! - (உமக்கே...)

அன்பானவர்களே!

உங்கள் ஜெப வேளையில் சகோதரர் எழுதிய இந்த பாடலை பாடி-
இயேசுவை துதியுங்கள்!
இயேசுவுக்குள் மகிழுங்கள்!
இயேசுவுக்கு மகிமையை செலுத்துங்கள்!

குடும்பத்தில் மனைவியின் பங்கு!

குடும்பத்தில் மனைவியின் பங்கு!

வேதத்தின் வெளிச்சத்திலே நம்முடைய வாழ்கையின் பாதையை சீர்தூக்கிப் பார்போம். 'உம்முடைய வசனம் என் கால்களுக்கு தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது' என்று தாவீது சங்கீதத்தில் கூறுவதை நாம் வாசித்திருப்போம். ஆனால் பெரும்பான்மையான நேரங்களில் போதகத்தை கேட்பதோடு நின்று விடுகிறோம். அல்லது வாசித்த வேத பகுதியை நம்முடைய வாழ்கையில் நடைமுறை படுத்த தேவையான முயற்சிகளை எடுக்க தவறி விடுகிறோம்.

இன்று குடும்பங்களில் மனைவியின் பங்கு குறித்து வேதத்தில் தேவன் என்ன கூறியுள்ளார் என்று பார்போம். பின்னர் அவ்வசனங்களுக்கு நம்முடைய பதில் என்னவென்றும் சிந்திப்பது நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பிரயோஜனமாக இருக்கும். தேவன் நமக்கு உதவி செய்வாராக.

தனிப்பட்ட வாழ்க்கை

1. I தீமோத்தேயு 2:10 - தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும் , தேவ பக்தியுள்ளவர்களென்று சொல்லிகொள்ளுகிற ஸ்திரிகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்.

• என்னுடைய உடை தேவ பக்தியுள்ள பெண்ணாக என்னை உலகிற்கு காட்டுகிறதா?

• என்னுடைய வெளிப்புற தோற்றம் அடக்கமாக, ஒழுக்கமாக மற்றவர்கள் மதிக்கத்தகும் வகையில் உள்ளதா?

2. I பேதுரு 3:3,4 - புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும், அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது ;

• என்னை காண்கிறவர்கள் உள்ளான அலங்காரத்தை காண்கிறார்களா ? புறம்பான ஆடம்பரத்தை காண்கிறார்களா ? ஆவியின் கனிகளினால் நிறைந்த நன்றியுள்ள இருதயம் தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது .

• ஒரு நாளில் நாம் எவ்வளவு நேரம் ஆவிக்குரிய காரியங்களிலும், வெளிப்புற அழகிற்கும் செலவு செய்கிறோம் ?

3. I தீமோத்தேயு 2:11 -ஸ்திரியானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளகடவள்

பவுல் தன்னுடைய உடன் ஊழியனான தீமோத்தேயுவிற்கு, தேவனுடைய வீட்டில் விசுவாசிகள் நடக்க வேண்டிய வகையை குறித்து முதலாம் கடிதத்தை எழுதுகிறார். (I தீமோத்தேயு 3:15) எபேசு பட்டணத்தில் இருந்த சபை, பலவிதமான வேற்று உபதேசங்களை பின்பற்றி வந்தது. அங்கே ஊழியம் செய்ய அனுப்பிவிடப்பட்ட தீமோத்தேயுவிற்கு பவுல் இந்த நிருபத்தை எழுதுகிறார். (1தீமோத்தேயு 3,4 ) இந்த எபேசு சபையின் ஸ்திரிகளில் சிலர், பொய்யான உபதேசங்களுக்கு செவிசாய்த்து, வழிவிலகி சென்றனர். (2 தீமோத்தேயு 3:6,7 ; 4:1-3) அமைதலுள்ள ஆவியோடு மாயமற்ற உபதேசத்திற்கு செவிகொடுக்காமல், போதனை செய்கிறவர்களோடு தர்க்கித்தனர். எனவே பவுல், ஸ்திரிகள் நற்போதனைகளை சாந்தமாய் கேட்டு , இருதயத்தில் ஏற்றுக்கொண்டு, அதன்படி அமைதலான ஜீவியம் தங்கள் குடும்பங்களில் காணப்பட கற்றுக்கொள்ளகடவர்கள் எனக் கூறுகிறார்.

• இன்று நாம் சபையின் செய்திகளை அமைதலோடு கற்றுகொள்கிறோமா? மற்றவர்களுக்கு உபதேசிக்கிரவர்களாய் காணப்படுகிறோமா?

• அல்லது,சபையின் நடைமுறைகளை பிறரிடம் விமர்சிக்கிறோமா?

• நம்முடைய ஜீவிதம் அமைதலாய் உள்ளதா?

4. I தீமோத்தேயு 6:7, 8 - போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை , இதிலிருந்து ஒன்றும் கொண்டுபோவதுமில்லை

• இன்று என் வாழ்க்கையின் எந்த இடத்திலே 'போதும்' என்று இருக்க வேண்டும்?

• அளவுக்கு அதிகமாக, அல்லது வசனத்திற்கு புறம்பாக எதை நான் விரும்புகிறேன்?

குடும்ப வாழ்க்கை

1. எபேசியர் 5:23, 24 - கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுப் போல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்;...ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்த புருஷர்களுக்கு எந்த காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்.

• குடும்பத்தின் தலைவன் கணவர். அது தேவனால் அவருக்குக் கொடுக்கப்பட்ட கடமை. என்னுடைய கணவரை குடும்பத்தின் தலைவராக காண்கிறேனா? அவர் என்னை வழி நடத்த அனுமதிக்கிறேனா?

• சபையானது கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிவது போல நான் என் கணவருக்கு கீழ்ப்படிகிறேனா?

• என்னுடைய எண்ணங்களிலும், செய்கையிலும் கணவருக்கு கீழ்ப்படிகிறேனா?

2.எபேசியர்5:33"... மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள்"

• நான் என் கணவரை மதிக்கிறேன் , அவர் மீது மரியாதை வைத்துள்ளேன் என்பதை அவர் உணர்ந்துள்ளாரா?

• என்னுடைய வார்த்தையினாலும், நடக்கையினாலும், ஆலோசனைகளினாலும் மற்ற பெண்கள் தங்கள் கணவரை மரியாதையோடு காண மாதிரியாய் உள்ளேனா?

3. I தீமோத்தேயு 2:15-"அப்படியிருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால், பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள்.

• பிள்ளைகளை பெற்று, தேவ பக்தியுள்ளவர்களாய் வளர்ப்பதே தேவன் எனக்கு கொடுத்த பெரிய பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்பட்டது உண்டா?

• என்னுடைய நடக்கையிலும், பேச்சிலும், செயலிலும் பிள்ளைகளுக்கு நல்ல உதாரணமாக இருக்கின்றேனா?

4.II தீமோத்தேயு 3:15-"கிறிஸ்து இயேசுவை பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக் கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயது முதல் அறிந்தவனென்றும் உனக்கு தெரியும்"

• என்னுடைய பிள்ளைகளுக்காக தினமும் ஜெபிக்கின்றேனா?

• அவர்களுடைய இருதயத்தில் தேவ வார்த்தையை விதைக்க உழைக்கின்றேனா?

• சுய வேலைகளை பாராமல், பிள்ளைகளை சபைக்கு அழைத்து வந்து, தேவ வார்த்தைகளை கேட்கச் செய்கிறேனா?

• சபையின் விசுவாசிகளோடு பிள்ளைகள் ஐக்கியமாக உள்ளார்களா?

• தேவனையும் அவருடைய சத்தியத்தையும் கேட்டு புரிந்துகொள்கிறர்களா?

வீடு

1. நீதிமொழிகள் 14:1 -" புத்தியுள்ள ஸ்திரி தன் வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரியோ தன் கைகளினாலே அதை இடித்துப்போடுகிறாள்"

• இந்த இரண்டு ஸ்திரிகளில் யாருடைய குணம் என்னிடம் உள்ளது. என்னுடைய நோக்கமும் செயலும் எதை நோக்கி செல்கிறது?

2.நீதிமொழிகள் 31:27 -"அவள் சோம்பலின் அப்பத்தைப் புசியாமல், தன் வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாயிருக்கிறாள்"

• என்னுடைய வீட்டின் காரியம் கிரமமாக உள்ளதா?

• நேர்த்தியான , தூய்மையான வீடாக உள்ளதா?

• கர்த்தர் விரும்பாத பொருட்கள் வீட்டிலே உண்டா ?

• என்னுடைய வீட்டில் நான் கவனிக்க வேண்டிய முக்கியமான காரியங்கள் என்னென்ன?

3. I தீமோத்தேயு 5:14-"...விவாகம் பண்ணவும், பிள்ளைகளை பெறவும், வீட்டை நடத்தவும் ..."

• வீட்டின் காரியத்தை குறித்து தேவன் கொடுத்த திட்டம் இதுவே - இதை குறித்து என்னுடைய எண்ணம் என்ன? வீட்டுவேலைகளை நான் பொறுப்புடன் செய்கிறேனா?

• தேவன் விரும்பும் வண்ணம் வீட்டை நிர்வாகிக்க விருப்பம் உண்டா?

சமுதாயம்

I தீமோத்தேயு 5:10-"பிள்ளைகளை வளர்த்து, அந்நியரை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக்கழுவி, உபத்திரப்படுகிறவர்களுக்கு உதவி செய்து, சகலவித நற்கிரியைகளையும் ஜாக்கிரதையாய் நடப்பித்து ,இவ்விதமாய் நற்கிரியைகளைக் குறித்து நற்சாட்சி பெற்றவளுமாயிருந்தால் ..."

• நம்முடைய வீடு ஊழியங்களுக்கு திறந்து கொடுக்கப்படுகிறதா?

• நம்மை சுற்றி உள்ளவர்கள் தேவனை அறிய வாய்ப்புள்ளதா?

• சபையின் ஊழியங்களில் சகோதரிகளோடும், பிள்ளைகளோடும் பங்கு கொள்கிறேனா?

• மற்ற விசுவாசிகளின் தேவைகளை அறிந்து வாழ்கின்றேனா? அவர்களுக்கு என்னால் ஆறுதல் உண்டா?

மேன்மையான நோக்கம்

1.தீத்து 2:4, 5-"தேவவசனம் தூசிக்கப்படாதப்படிக்கு பாலிய ஸ்திரிகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும் , வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிருக்கும்படி ,நற்காரியங்களை போதிக்கிறவர்களுமாயிருக்கவும் முதிர்வயதுள்ள ஸ்திரிகளுக்கு புத்திசொல்லு. "

• மேற்கூறிய வசனத்தின் வரிசையின் படி நான் விருப்பம் கொள்கிறேனா? அல்லது, வேறு ஒரு ஒழுங்கு முறையில் வாழ்க்கையின் திட்டங்களை தீட்டுகிறேனா?

• என்னுடைய குடும்பத்தை நேசித்து அவர்களது தேவைகளை சந்திக்க போதுமான அளவு முயற்சி செய்கிறேனா?

• என்னிலே சுயநலமற்ற , தியாகமான, சேவிக்கிற அன்பின் மாதிரியை என் கணவரும், பிள்ளைகளும் காண்பார்களா?

• நான் ஆவியிலே எளிமை, அன்பு, சுய அடக்கம் கொண்டவளாக உள்ளேனா?

• என்னுடைய வாழ்கை வேதம் சித்தரிக்கும் குணசாலியான ஸ்திரிபோல உள்ளதா?

மேற்கண்ட வசனங்கள் பெண்களை குறித்ததான தேவனுடைய இருதயத்தை வெளிப்படுத்துகிறது. அதோடு தொடர்புடைய கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளித்திருப்பீர்கள். நாம், எங்கு குறைவு பட்டு காணப்படுகிறோமோ அங்கு தேவ ஆவியானவர் உதவிக் கொண்டு சரி செய்து கொள்வோம். பின் ஒரு நாளில் நம்முடைய ஆண்டவரின் சந்நிதானத்தில் மாசற்ற பிள்ளைகளாய் நிற்க வழி செய்வோம்.

- பெண்கள் கலந்தாய்வு, டேரா பிரதரன் சபை ,துபாய்.
நன்றி: http://tamilbrethren.com

நீங்கள் கர்த்தரோடு இருந்தால் அவர் உங்களோடு இருப்பார்

நீங்கள் கர்த்தரோடு இருந்தால் அவர் உங்களோடு இருப்பார்

எனக்கு அருமையான சகோதரிகளே,

உங்களோடு தொடர்பு கொள்ள செய்த தேவாதி தேவனுக்கு கோடானு கோடி ஸ்தோத்திரம்.

நாம் கர்த்தரோடிருக்க வேண்டும்.

நாம் கர்த்தரோடிருக்க வேண்டும் என்றால் அதிகாலையில் எழுந்து வேதம் வாசித்து ஜெபிக்க வேண்டும்.

இயேசப்பா இதை தான் விரும்புகிறார்.

என் பிள்ளைகள் என்னை விரும்புகிறார்களா? என்னோடு பேசுவார்களா? என்னோடு வாழ்வார்களா? என்று தான் நம்மிடம் எதிர்பார்கிறார்.

நாம் அவருடைய வசனத்தை குறித்து தியானிக்க வேண்டும். நாம் அவ்வாறு தியானிக்கும்போது நமது மனம் தெளிவடையும்.

மன கலக்கம், மன பாரம் எல்லாம் நம்மைவிட்டு அகன்று போகும். அவர் நம்முடைய மனதை தெளிவுபடுத்துவார். அன்றைக்குரிய காரியத்தை குறித்து நம்மிடம் பேசுவார்.

நாம் மட்டும் அல்ல-

நம் வீட்டில் உள்ளவர்களையும், நமக்கு அருமையானவர்கள் அனைவரையும் இதை போல் தியானிக்க சொல்வோம்.

நாம் கர்த்தரோடு நெருங்கி வாழும்போது அவர் நம்மோடு கூட உறவாடுவார்.

நம் மீது மிகவும் அன்புள்ளவராய் நம்மை அதிகம் அதிகமாய் நேசிக்கிறவராய் இருக்கிறார்.

எல்லா பிரச்சனைகளுக்கும், சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் நம்மை விலக்கிகாப்பார். தாய் தன் பிள்ளையை தோள் மீது சுமந்து காப்பது போல, அவர் நம்மை நம்முடைய எல்லா தீங்குகளுக்கும் விலக்கி அவருடைய தோளில் சுமந்து காக்கிறார்.

நாம் எந்த வேலை செய்தாலும் இதயத்தில் அவரை துதித்துகொண்டே, ஸ்தோத்தரித்துகொண்டே எல்லா பணிகளையும் செய்ய வேண்டும்.

அப்பொழுது அவர் நம்ம விட்டு விலகாமல் நம்மோடு கூட எப்பொழுதும் இருப்பார்.

இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ள, 'நாம் அவரோடு இருப்போம் அவர் நம்மோடு இருப்பார்'.
II நாளாகமம் 15 : 2

ஆமென்.