பக்கங்கள்

வியாழன், 22 நவம்பர், 2012

பாட்டில் குடிநீர்

பாட்டில் குடிநீர் பயன்பாடு 21 சதவீதம் வளர்ச்சி
ராஜ்கோட்:இந்தியாவில், பாட்டிலில் அடைத்து விற்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரின் பயன்பாடு, சென்ற, 2011-12ம் நிதியாண்டில், 21 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இருப்பினும், உலக சராசரி பயன்பாட்டுடன் ஒப்பிடும் போது, இதில், நம்நாடு மிகவும் பின்தங்கியுள்ளது என, ஐகான் சந்தை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த, 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் தனி நபர், பாட்டில் குடிநீர் பயன்பாடு, 16.20 லிட்டர் என்றளவில் இருந்தது. இது, சென்ற நிதியாண்டில், 21 சதவீதம் வளர்ச்சி கண்டு, 19.60 லிட்டராக அதிகரித்துள்ளது. இருப்பினும், உலக சராசரி பயன்பாட்டுடன் (30 லிட்டர்) ஒப்பிடுகையில், இது மிகவும் குறைவான அளவாகும்.நாட்டின் ஒட்டு மொத்த பாட்டில் குடிநீர் விற்பனையில், தென்னிந்தியாவின் பங்களிப்பு, 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இதையடுத்து, மேற்கு மாநிலங்கள் குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்பை கொண்டுள்ளன.
பாட்டில் குடிநீர் பயன்பாட்டில், மேற்கத்திய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. குறிப்பாக, மெக்சிக்கோவில், தனி நபரின் பாட்டில் குடிநீர் பயன்பாடு, சராசரியாக, 250 லிட்டர் என்றளவில் உள்ளது. இதைத் தொடர்ந்து, ஆண்டுக்கு, 190 லிட்டர் என்றளவுடன் இத்தாலி, இரண்டாம் இடம் வகிக்கிறது. உலகளவில், தனிநபர், பாட்டில் குடிநீர் பயன்பாட்டில், முதல், 20 நாடுகளில், ஆசியாவை சேர்ந்த, தாய்லாந்து (115 லிட்டர்), சீனா-ஹாங்காங் (95 லிட்டர்), ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் நுகர்வோரின் செலவிடும் வருவாய் உயர்ந்து வருவது போன்றவற்றால், வரும், 2020ம் ஆண்டிற்குள், நாட்டின், தனி நபர், பாட்டில் குடிநீர் பயன்பாடு, 30 லிட்டராக அதிகரிக்கும். அதேசமயம், உலக நாடுகளின் சராசரி பயன்பாடு, 40 லிட்டர் என்றளவில் இருக்கும் என, ஐகான் நிறுவனத்தின் முதன்மை ஆலோசகர் அசாஜ் மோட்டிவாலா தெரிவித்தார்.

கேன் வாட்டர் தொழில் ஒரு பார்வை
சூப்பர் தொழில் ஏதாவது சொல்லுங்கள் என்று யாரிடம் கேட்டாலும் அவர்கள் சொல்லும் பட்டியலில் நிச்சயம் கேன் வாட்டர் பிஸினஸும் இருக்கும். அந்த அளவுக்கு நல்ல வாய்ப்புள்ள ஒரு தொழிலாக இது மாறியிருக்கிறது. இன்றைய சூழ்நிலையில், ஒன்று கிடைக்கும் குடிதண்ணீரை கொதிக்க வைத்து ஆற வைத்து குடிக்கும் அளவுக்கு யாருக்கும் நேரமிருப்பதில்லை; அல்லது குடிதண்ணீரே கிடைப்பதில்லை... இப்படிப்பட்ட சூழ்நிலையில் கைகொடுப்பது கேன் வாட்டர்’ என்று அழைக்கப்படும் சுத்திகரிக்கப்பட்டு கேன்களில் வழங்கப்படும் குடிதண்ணீர்தான்.


சந்தை வாய்ப்பு! 

நகர்ப்புறங்களில் கேன் வாட்டருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் இதைத்தான் பயன்படுத்து கிறார்கள். பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள், பொது நிகழ்ச்சிகள், திருமணங்கள், ஓட்டல்கள், சாலையோர உணவகங்கள் போன்ற வற்றிலும் கேன் வாட்டர்தான் பயன்படுத்தப் படுகிறது. இதனால் அதிகமான சந்தை வாய்ப்பு உருவாகியுள்ளது. 

முதலீடு! 

இந்தத் தொழிலைத் தொடங்க குறைந்தபட்சம் பத்து லட்சம் ரூபாய் தேவை. பத்து லட்சம் முதல் முப்பது லட்சம் ரூபாய் வரையிலான முதலீட்டிலும் இந்த தொழிலை தொடங்கி நடத்தலாம். 

மூலப் பொருட்கள்! 

தண்ணீர்தான் முக்கிய மூலப் பொருள். தண்ணீரை சுத்தம் செய்ய சில வகையான கெமிக்கல்கள் தேவை. 




தயாரிப்பு! 

கேன் வாட்டர் தயாரிப்பில் மொத்தம் ஏழு நிலைகள் உண்டு. முதல் நிலை, தண்ணீர் சேகரிக்கும் தொட்டியில், அதாவது சம்ப்’பில் (Sump) தண்ணீரை நிரப்புவது. சம்பில் தண்ணீரை நிரப்பிய பிறகு சாண்ட் ஃபில்டர் (Sand Filter) என்ற இயந்திரத்திற்கு அனுப்புவது இரண்டாம் நிலை. இந்த இயந்திரம் கூழாங்கல், குறுமண் ஆகியவற்றால் நிரப்பப் பட்டிருக்கும். இங்குதான் தண்ணீர் சுத்திகரிப்பு நடக்கும். தண்ணீரில் உள்ள தூசி, அழுக்கு போன்றவற்றை இந்த இயந்திரம் நீக்கிவிடும். மூன்றாவது நிலையில், ஆக்டிவேட்டட் கார்பன் ஃபில்டர் (Activated Carbon Filter) என்ற இயந்திரத்திற்கு தண்ணீர் அனுப்பப்படும். இந்த இயந்திரம் நிலக்கரியால் நிரப்பப்பட்டிருக்கும். இங்கு அழுத்தம் கொடுப்பதனால் தண்ணீரில் உள்ள தூசி மற்றும் அழுக்குகள் நீக்கப்படும். இதனால் தண்ணீரின் கடினத்தன்மையும் குறையும். 

நான்காம் நிலையில், மைக்ரான் ஃபில்டர் பிராஸஸ் (Micron Filter) என்னும் முறையின் மூலம் தண்ணீரில் இருக்கும் நுண்கிருமிகள் நீக்கப்படும். அடுத்து ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் இயந்திரத்திற்கு தண்ணீர் அனுப்பப்படும். இங்கு அதிக அழுத்தம் கொடுப்பதன் மூலம் தண்ணீரில் உள்ள அளவுக்கதிகமான உப்பு, கால்சியம், இரும்பு போன்றவை தனியாகப் பிரிக்கப்படுகிறது. இந்த இயந்திரத்தின் குழாய் இரண்டாகப் பிரிக்கப் பட்டுள்ளது. ஒரு குழாயில் நல்ல தண்ணீரும், மற்ற குழாயில் தேவையற்ற தண்ணீரும் வெளியே வந்துவிடும். நல்ல தண்ணீர் ஸ்டோரேஜ்’ டேங்குக்கு அனுப்பப்படும். இது ஐந்தாவது நிலை. 

இந்த டேங்கில் உள்ள தண்ணீர் ஒஸநேட்டர்’ என்ற இயந்திரம் மூலம் ஸ்டெர்லைஸ் செய்யப்படுவது ஆறாம் நிலை. அடுத்து அல்ட்ராவயலெட் பல்ப் (UV Bulb) என்ற இயந்திரத்திற்கு அனுப்பப்படுகிறது. புற ஊதாக் கதிர்களால் தண்ணீரில் உள்ள வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகள் அழிக்கப்படும். இதுதான் ஏழாவது நிலை. இதன்பின் இறுதியாக, சுத்தமான தண்ணீர் ஃபில்லிங்’ இயந்திரத்திற்கு அனுப்பப்பட்டு கேன்களில் அடைக்கப் படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பாட்டில் அல்லது கேன்களில் நிரப்ப ஒரு பகுதி தனியாக இருக்க வேண்டும். அந்த அறை கண்டிப்பாக ஏசி வசதி கொண்டதாக இருக்க வேண்டும். இப்படி தயாராகும் தண்ணீரை நேராக மார்க்கெட்டிங் செய்ய கொண்டு சென்றுவிடலாம். 

கட்டடம்! 

இத்தொழில் செய்ய குறைந்தபட்சம் 2,000 சதுர அடி இடம் கொண்ட கட்டடம் தேவைப்படும். கட்டடத்தில் பலவிதமான பணிகள் செய்ய தனித்தனியே அறைகள் அமைக்கப்பட வேண்டும். தண்ணீர் நிரப்ப ஒரு அறையும், அதன் சுத்தத்தன்மையை ஆராய ஒரு பரிசோதனைக் கூடமும், ஆரோ பிளான்டில் சுத்தம் செய்ய ஒரு அறையும் தேவைப்படும். 

மின்சாரம்! 

21-30 ஹெச்.பி. மின்சாரம் வரை தேவைப்படுகிறது. 

இயந்திரங்கள்! 

மண்ணை சுத்தப்படுத்தும் இயந்திரம் - சாண்ட் ஃபில்டர், ஆக்டிக் கார்பன் ஃபில்டர், மைக்ரான் ஃபில்டர், ஆர்.ஓ.யூனிட், தண்ணீர் சேகரித்து வைக்கும் டேங்க், ஒஸநேட்டர், புறஊதாக் கதிர்கள் சிஸ்டம் ஆகியவை தேவைப்படும். இந்த இயந்திரங்கள் அனைத்துமே ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். தண்ணீரின் சுத்தத்தை ஆய்வு செய்ய ஆய்வகத்தில் இன்குபேட்டர், வாட்டர் பாத், மைக்ரோஸ் கோப் போன்றவைகள் தேவைப்படும். 

வேலையாட்கள்! 

இத்தொழிலுக்கு குறைந்த பட்சம் எட்டு பேர் முதல் பதினெட்டு பேர் வரை தேவை. மேலும், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை ஆய்வு செய்ய மைக்ரோ லேப்-பில் பி.எஸ்.சி. மைக்ரோபயாலஜி படித்த ஒருவரும், கெமிக்கல் லேப்-பில் பி.எஸ்.சி. கெமிஸ்ட்ரி படித்த ஒருவரும் தேவை. 

பிளஸ்! 

மற்ற தொழிலில் மூலப் பொருளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆனால், தண்ணீர் ஏறக்குறைய எந்த செலவும் இல்லாமல் கிடைத்துக் கொண்டே இருப்பது இந்தத் தொழிலில் உள்ள மிகப் பெரிய பிளஸ். 

மைனஸ்! 

12,000 லிட்டர் தண்ணீரை சுத்திகரித்தால் 6,000 லிட்டர் மட்டுமே இறுதியில் சுத்தமாக்கி பயன்படுத்த முடியும் என்பதால் செலவு அதிகமாக இருக்கும். போட்டியாளர்கள் அதிகமானவர்கள் இதில் இருப்பது இன்னொரு பெரிய மைனஸ். 

லேப் பணிகள்! 

சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் டி.டி.எஸ். டெஸ்ட்டும், ஓடர் டெஸ்ட்டும் (ODOUR TEST) செய்யப்படும். மேலும், கெமிக்கல் ஆய்வகத்தில் பி.ஹெச். லெவல் டெஸ்ட் செய்வது அவசியம். 

கட்டுப்பாடுகள்! 

சட்டப்படி இங்கு வேலை செய்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது. தண்ணீரை நிரப்பும் பகுதியில் வேலை செய்யும் பெண்கள் கண்டிப்பாக பூ, பொட்டு, வளையல் போன்றவை அணியக்கூடாது. கண்டிப்பாக அவர்களுக்கு மருத்துவச் சான்றிதழ் தேவை. தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கையில் உறை, வாயில் முகமூடியும் (விகிஷிரி) அணிந்து கொள்ள வேண்டும். இருபது லிட்டர் கேன்களை மறுபடி உபயோகப்படுத்தும் போது சோப் ஆயில், குளோரின், சுடு தண்ணீர் போன்றவற்றால் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். * ஐ.எஸ்.ஐ. தரச்சான்று பெற வருடம் 97,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும். * தண்ணீர் நிரப்பப்பட்ட 20 லிட்டர் கேன் ஒன்றின் விலை 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு கேனுக்கு 3 முதல் 5 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. * தண்ணீர் பேக் (றிகிசிரி) செய்யும் அளவுகள்: 300 மில்லி, 500 மில்லி, 1 ,2, 5, 20 லிட்டர். * மழை நீரை நேரடியாக சுத்திகரிக்கக் கூடாது. இளைஞர்கள் அதிகளவில் ஈடுபட்டு வரும் தொழில். அதிகரித்து வரும் சந்தையும் சாதகமாக இருப்பதால் துணிந்து இத்தொழிலில் இறங்கலாம்.
மினரல் வாட்டர் பிளாண்ட் குறைந்த செலவில் அமைக்கிறோம்!!!
நமது குழந்தைகள் படிக்கும் கல்வி நிறுவனங்கள், கோவிலுக்கு சமம் என்பார்கள். தற்போது கல்லூரிகள் ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் பெற்று வருவதால் அங்கு தூய குடிநீர் தேவை. மாணவர்கள் ஆரோக்கியம் பெற, ஒவ்வொரு கல்லூரிகளும் தனது கேன்டின்களில் வாட்டர் பிளாண்ட்களை அமைக்க வேண்டும். இப்படி பல கல்லூரிகளுக்கு நியாயமான விலையில் தரமான வாட்டர் பிளாண்ட்களை      அமைத்து வருகிறோம் என்கிறார் எக்ஸல் வாட்டர் சிஸ்டம்ஸ் திரு.வினாயகமூர்த்தி அவர்கள் .மேலும் அவர் கூறுகையில்,
கடந்த 12 வருடங்களுக்கு முன் தொடங்கப் பட்ட  எக்ஸல் நிறுவனம் வித விதமான வாட்டர் பிளாண்ட்களை அமைக்கிறது. மேலும், இன்று நிலத்தடி நீர், ஆற்று நீர், கிணற்று நீர் போன்ற பலதரப்பட்ட தண்ணீர்களை நேரடியாகப் பருகுவதால், நமது உடலில்  பல வித   நோய்கள் வருகிறது.
இதைத் தவிர்க்க சென்னையைப் போன்ற பெரு நகரங்களில் மினரல் வாட்டருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதுவும் ஐ.எஸ்.ஐ முத்திரையுடன் தயாராகும் குடிநீர் மிகவும் சுத்தமான குடிநீர். இந்தத் தரமான வாட்டர் ட்ரிட்மெண்ட் கருவிகளை நாம் அமைத்துக் கொள்வதன் மூலம் உடல் நலத்தைக் காப்பதுடன் கை நிறையவும் சம்பாதிக்கலாம்.
மேலும் வாட்டர் ட்ரிட்மெண்ட் துறையில் கடந்த   12    ஆண்டுகள்   அனுபவமும், தேர்ச்சியும் பெற்ற ஐ.எஸ்.ஒ. 9001:2000 தரம் பெற்றது   எங்கள்    நிறுவனம்.   வாட்டர் ட்ரிட்மெண்ட் என்றாலே எக்ஸல் என்று கூறும் அளவுக்கு மக்களிடம் நல்லதொரு கருத்தைப் பெற்றிருக்கிறோம்.  மனிதனின் வாழ்க்கையில் தண்ணீர் ஒரு முக்கிய பொருள். அதே வேளையில்     சுற்றுப்புறச்சூழல்    பாதிப்பால் தண்ணீரே    விஷமாகும்       நிலை உருவாகிவிட்டது.
இதைத் தடுக்க கழிவுநீர் வாட்டர் ட்ரிட்மெண்ட் தொழில்துறை வரவு ஒரு வரப்பிரசாதம். இந்த வகையில் வாட்டா; ட்ரிட்மெண்ட் பிளாண்ட் அமைத்துக் கொடுக்கும் நிறுவனங்கள் இந்தியாவில் பல ஆயிரத்தை தாண்டியுள்ளது. இவர்களின் எந்திரத்தேவையை பு+ர்த்தி செய்யும் விதத்தில் எமது சொந்த நிறுவனத்தில் விதவி தமான வாட்டர் ட்ரிட்மெண்ட் கருவி கள், எந்திரங்களைத் தரமுடன் தயாhpத்து குறைந்த விலைக்கு விற்பனை செய்வதுடன் மினரல் வாட்டர் தொழில் வாய்ப்பும் எங்களது நிறுவனத்தின் மூலம் கிடைக்கும்.
வாட்டர் ட்ரிட்மெண்ட் பிளாண்ட் அமைப்பதுடன் சர்வீஸ் பணியும் செய்து வருகிறோம் என்பதால், வாட்டர் ட்ரிட்மெண்ட் பணியில் உள்ள நிறுவனங்கள் எந்திரத்தேவைக்கு எங்களை அணுகலாம்.
தென்னிந்தியா முழுவதும் கிளை நிறுவனங்கள் உள்ளதால் அந்தப் பகுதி மக்கள் அவரவர்கள் பிளாண்ட் தேவைகளுக்கும் எங்களது கிளை நிறுவனங்களை அணுகலாம். நேரடியாகவும் எங்களை தொடர்பு கொள்ளலாம்.
இந்த வாட்டர் ட்ரிட்மெண்ட் பிளாண்ட் இல்லாத கல்லூரிகள், ஹோட்டல்கள், வீடுகள், பில்டர்கள், மருத்துவமனைகள், நிறுவனங்கள் உடனே அணுகலாம். மேலும் மினரல் வாட்டருக்கு நல்ல எதிர்காலம் உள்ளதால்,தொழில் முனைவோர்கள் உடனே தொடர்பு கொண்டால் அவர்களது இடவசதி, பகுதி, தண்ணீர் இவற்றை ஆய்வு செய்து தேவைக்கேற்ற நியாயமான விலையில் பிளாண்ட் அமைப்பதுடன் புரடக்ட் முதல் விற்பனை வரை அனைத்து        விளக்கம்        மற்றும் தொழில் தொடங்க திட்ட அறிக்கை வழி காட்டல்களும் எங்களிடம் உள்ளது. நிலத்தடி நீரை ஒரு பாட்டிலில் எடுத்து வந்தால், முதலில் டெஸ்ட் செய்து தண்ணீருக்கேற்ற, ஆர்ஓ.,டி.எம். போன்ற அனைத்து பிளாண்ட்களும் அமைப்பதுடன் ‘ஐ.எஸ்.ஐ” முத்திரை பெற்ற லேப் செட்டப் வகைகளும் அமைத்துக் கொடுத்து தொழில் தொடங்க வழிகாட்டுகிறோம் என்கிறார்.
மேலும் மக்களுக்கு தரமான குடிநீரை வழங்கும் பணி யில் எமது துணை நிறுவனமான அக்வா நிறுவனம் உள்ளது. இதன் மூலம் டயட் அக்வா குடிநீரை வழங்குகிறோம்.
மினரல் வாட்டர் பிளாண்ட் அமைக்க.
EXEL WATER
SYSTEMS
PRIVATE LIMITED
# 16, Umapathy Thottam, Maduvankarai,
Ph: 044-22448046, 22448032,
Fax: 044-22442431
Cell: 9444376640/50
Email: exel@eth.net
Website : www.exelwater.co.in
Factory
DP-No.28, New SIDCO Industrial Estate,
Maraimalai Nagar,
Kancheepuram Dist-603 209,
Tamil Nadu , India.
E-Mail: exelenviro@gmail.com
Ph:   044-27401825 /
Cell: 9444376639
Help Line: 9444376640/50
Service Call: 9444376643
Marketing Office:
Chennai
Plot No.1, Door No1-A,
Angalamman Koil 2nd Street,
Near Vandikaran Salai,
Velachery,
Chennai – 600 042.
Cell: 9444376643.

கேன் வாட்டர்...


சூப்பர் தொழில் ஏதாவது சொல்லுங்கள் என்று யாரிடம் கேட்டாலும் அவர்கள் சொல்லும் பட்டியலில் நிச்சயம் கேன் வாட்டர் பிஸினஸும் இருக்கும். அந்த அளவுக்கு நல்ல வாய்ப்புள்ள ஒரு தொழிலாக இது மாறியிருக்கிறது. இன்றைய சூழ்நிலையில், ஒன்று கிடைக்கும் குடிதண்ணீரை கொதிக்க வைத்து ஆற வைத்து குடிக்கும் அளவுக்கு யாருக்கும் நேரமிருப்பதில்லை; அல்லது குடிதண்ணீரே கிடைப்பதில்லை... இப்படிப்பட்ட சூழ்நிலையில் கைகொடுப்பது 'கேன் வாட்டர்’ என்று அழைக்கப்படும் சுத்திகரிக்கப்பட்டு கேன்களில் வழங்கப்படும் குடிதண்ணீர்தான்.
  சந்தை வாய்ப்பு!
நகர்ப்புறங்களில் கேன் வாட்டருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் இதைத்தான் பயன்படுத்து கிறார்கள். பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள், பொது நிகழ்ச்சிகள், திருமணங்கள், ஓட்டல்கள், சாலையோர உணவகங்கள் போன்ற வற்றிலும் கேன் வாட்டர்தான் பயன்படுத்தப் படுகிறது. இதனால் அதிகமான சந்தை வாய்ப்பு உருவாகியுள்ளது.
 முதலீடு!
இந்தத் தொழிலைத் தொடங்க குறைந்தபட்சம் பத்து லட்சம் ரூபாய் தேவை. பத்து லட்சம் முதல் முப்பது லட்சம் ரூபாய் வரையிலான முதலீட்டிலும் இந்த தொழிலை தொடங்கி நடத்தலாம்.
 மூலப் பொருட்கள்!
தண்ணீர்தான் முக்கிய மூலப் பொருள். தண்ணீரை சுத்தம் செய்ய சில வகையான கெமிக்கல்கள் தேவை.
 தயாரிப்பு!
கேன் வாட்டர் தயாரிப்பில் மொத்தம் ஏழு நிலைகள் உண்டு. முதல் நிலை, தண்ணீர் சேகரிக்கும் தொட்டியில், அதாவது 'சம்ப்’பில் (Sump) தண்ணீரை நிரப்புவது. சம்பில் தண்ணீரை நிரப்பிய பிறகு சாண்ட் ஃபில்டர் (Sand Filter) என்ற இயந்திரத்திற்கு அனுப்புவது இரண்டாம் நிலை. இந்த இயந்திரம் கூழாங்கல், குறுமண் ஆகியவற்றால் நிரப்பப் பட்டிருக்கும். இங்குதான் தண்ணீர் சுத்திகரிப்பு நடக்கும். தண்ணீரில் உள்ள தூசி, அழுக்கு போன்றவற்றை இந்த இயந்திரம் நீக்கிவிடும்.
மூன்றாவது நிலையில், ஆக்டிவேட்டட் கார்பன் ஃபில்டர் (
Activated Carbon Filter) என்ற இயந்திரத்திற்கு தண்ணீர் அனுப்பப்படும். இந்த இயந்திரம் நிலக்கரியால் நிரப்பப்பட்டிருக்கும். இங்கு அழுத்தம் கொடுப்பதனால் தண்ணீரில் உள்ள தூசி மற்றும் அழுக்குகள் நீக்கப்படும். இதனால் தண்ணீரின் கடினத்தன்மையும் குறையும்.
நான்காம் நிலையில், மைக்ரான் ஃபில்டர் பிராஸஸ் (Micron Filter)  என்னும் முறையின் மூலம் தண்ணீரில் இருக்கும் நுண்கிருமிகள் நீக்கப்படும். அடுத்து ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் இயந்திரத்திற்கு தண்ணீர் அனுப்பப்படும். இங்கு அதிக அழுத்தம் கொடுப்பதன் மூலம் தண்ணீரில் உள்ள அளவுக்கதிகமான உப்பு, கால்சியம், இரும்பு போன்றவை தனியாகப் பிரிக்கப்படுகிறது. இந்த இயந்திரத்தின் குழாய் இரண்டாகப் பிரிக்கப் பட்டுள்ளது. ஒரு குழாயில் நல்ல தண்ணீரும், மற்ற குழாயில் தேவையற்ற தண்ணீரும் வெளியே வந்துவிடும். நல்ல தண்ணீர் 'ஸ்டோரேஜ்’ டேங்குக்கு அனுப்பப்படும். இது ஐந்தாவது நிலை.
இந்த டேங்கில் உள்ள தண்ணீர் 'ஒஸநேட்டர்’ என்ற இயந்திரம் மூலம் ஸ்டெர்லைஸ் செய்யப்படுவது ஆறாம் நிலை. அடுத்து அல்ட்ராவயலெட் பல்ப் (UV Bulb) என்ற இயந்திரத்திற்கு அனுப்பப்படுகிறது. புற ஊதாக் கதிர்களால் தண்ணீரில் உள்ள வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகள் அழிக்கப்படும். இதுதான் ஏழாவது நிலை.
இதன்பின் இறுதியாக, சுத்தமான தண்ணீர் 'ஃபில்லிங்’ இயந்திரத்திற்கு அனுப்பப்பட்டு கேன்களில் அடைக்கப் படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பாட்டில் அல்லது கேன்களில் நிரப்ப ஒரு பகுதி தனியாக இருக்க வேண்டும். அந்த அறை கண்டிப்பாக ஏசி வசதி கொண்டதாக இருக்க வேண்டும். இப்படி தயாராகும் தண்ணீரை நேராக மார்க்கெட்டிங் செய்ய கொண்டு சென்றுவிடலாம்.
 கட்டடம்!
இத்தொழில் செய்ய குறைந்தபட்சம் 2,000 சதுர அடி இடம் கொண்ட கட்டடம் தேவைப்படும். கட்டடத்தில் பலவிதமான பணிகள் செய்ய தனித்தனியே அறைகள் அமைக்கப்பட வேண்டும். தண்ணீர் நிரப்ப ஒரு அறையும், அதன் சுத்தத்தன்மையை ஆராய ஒரு பரிசோதனைக் கூடமும், ஆரோ பிளான்டில் சுத்தம் செய்ய ஒரு அறையும் தேவைப்படும்.
 மின்சாரம்!
21-30 ஹெச்.பி. மின்சாரம் வரை தேவைப்படுகிறது.
 இயந்திரங்கள்!  
மண்ணை சுத்தப்படுத்தும் இயந்திரம் - சாண்ட் ஃபில்டர், ஆக்டிக் கார்பன் ஃபில்டர், மைக்ரான் ஃபில்டர், ஆர்.ஓ.யூனிட், தண்ணீர் சேகரித்து வைக்கும் டேங்க், ஒஸநேட்டர்,  புறஊதாக் கதிர்கள் சிஸ்டம் ஆகியவை தேவைப்படும். இந்த இயந்திரங்கள் அனைத்துமே ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். தண்ணீரின் சுத்தத்தை ஆய்வு செய்ய ஆய்வகத்தில் இன்குபேட்டர், வாட்டர் பாத், மைக்ரோஸ் கோப் போன்றவைகள் தேவைப்படும்.        
                           
 வேலையாட்கள்!
இத்தொழிலுக்கு குறைந்த பட்சம் எட்டு பேர் முதல் பதினெட்டு பேர் வரை தேவை. மேலும், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை ஆய்வு செய்ய மைக்ரோ லேப்-பில் பி.எஸ்.சி. மைக்ரோபயாலஜி படித்த ஒருவரும், கெமிக்கல் லேப்-பில் பி.எஸ்.சி. கெமிஸ்ட்ரி படித்த ஒருவரும் தேவை.
 பிளஸ்!
மற்ற தொழிலில் மூலப் பொருளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆனால், தண்ணீர் ஏறக்குறைய எந்த செலவும் இல்லாமல் கிடைத்துக் கொண்டே இருப்பது இந்தத் தொழிலில் உள்ள மிகப் பெரிய பிளஸ்.
 மைனஸ்!
12,000 லிட்டர் தண்ணீரை சுத்திகரித்தால் 6,000 லிட்டர் மட்டுமே இறுதியில் சுத்தமாக்கி பயன்படுத்த முடியும் என்பதால் செலவு அதிகமாக இருக்கும். போட்டியாளர்கள் அதிகமானவர்கள் இதில் இருப்பது இன்னொரு பெரிய மைனஸ்.
 லேப் பணிகள்!
சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் டி.டி.எஸ். டெஸ்ட்டும், ஓடர் டெஸ்ட்டும் (ODOUR TEST) செய்யப்படும். மேலும், கெமிக்கல் ஆய்வகத்தில் பி.ஹெச். லெவல் டெஸ்ட் செய்வது அவசியம்.
 கட்டுப்பாடுகள்!
சட்டப்படி இங்கு வேலை செய்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது. தண்ணீரை நிரப்பும் பகுதியில் வேலை செய்யும் பெண்கள் கண்டிப்பாக பூ, பொட்டு, வளையல் போன்றவை அணியக்கூடாது. கண்டிப்பாக அவர்களுக்கு மருத்துவச் சான்றிதழ் தேவை. தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கையில் உறை, வாயில் முகமூடியும் (விகிஷிரி) அணிந்து கொள்ள வேண்டும். இருபது லிட்டர் கேன்களை மறுபடி உபயோகப்படுத்தும் போது சோப் ஆயில், குளோரின், சுடு தண்ணீர் போன்றவற்றால் கழுவி சுத்தப்படுத்த வேண்டும்.
* ஐ.எஸ்.ஐ. தரச்சான்று பெற வருடம் 97,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும்.
* தண்ணீர் நிரப்பப்பட்ட 20 லிட்டர் கேன் ஒன்றின் விலை 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு கேனுக்கு 3 முதல் 5 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது.
* தண்ணீர் பேக் (றிகிசிரி) செய்யும் அளவுகள்: 300 மில்லி, 500 மில்லி, 1 ,2, 5, 20 லிட்டர்.
* மழை நீரை நேரடியாக சுத்திகரிக்கக் கூடாது.
இளைஞர்கள் அதிகளவில் ஈடுபட்டு வரும் தொழில். அதிகரித்து வரும் சந்தையும் சாதகமாக இருப்பதால் துணிந்து இத்தொழிலில் இறங்கலாம்
‘வாட்டர் கேன்’
வீடுகளுக்கு வரும் ‘வாட்டர் கேன்’களில் 60 சதவீதம் தண்ணீர் தரமற்றதாக உள்ளது. 


இதுபோன்ற தரமற்ற தண்ணீரை குடித்தால், நிமோனியா தொற்று ஏற்பட்டு நுரையீரல் பாதிக்கும் அபாயம் உள்ளதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். 

கோடை காலம் தொடங்கி விட்டதால், தண்ணீர் தாகமும் அதிகரிக்கும். தாகம் ஏற்படும்போது கிடைக்கும் தண்ணீரை குடிப்பது, கடைகளில் குளிர்பானம், மோர் என்று இதமாக சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது. 

சாலை ஓரங்களில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படும் குளிர்பானம், மோர் வாங்கி குடிப்பதால் வெயில் காலங்களில் பலருக்கு தொண்டையில் கரகரப்பு, இருமல், சளி ஏற்பட்டு கஷ்டப்படுகிறார்கள்.

வெயில் காலங்களில் ஏற்படும் இதுபோன்ற தொண்டை பிரச்னைகளை தடுப்பது குறித்து இந்திய பொது சுகாதார சங்கத்தின் தமிழக கிளையின் தலைவரும், முன்னாள் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குனருமான டாக்டர் இளங்கோ கூறியதாவது:

தமிழகம் முழுவதும் குறிப்பாக நகர்ப்புறங்களில் குடிநீருக்காக 20 லிட்டர் கொண்ட ‘வாட்டன் கேன்’களை பயன்படுத்துகிறார்கள். கேன்களில் குடிநீர் வாங்கினால் அது சுகாதாரமாகத்தான் இருக்கும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அது முற்றிலும் தவறு. உதாரணத்துக்கு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்துதான் வாட்டர் கேன் சப்ளையாகிறது. இதில் ஒரு சில கம்பெனிகளில் தவிர பல கம்பெனிகளில் ஐஎஸ்ஐ முத்திரை குத்திய லேபிள் இருக்குமே தவிர, உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ள தரத்துடன் தண்ணீர் சப்ளை செய்யப்படுவதில்லை. 

உண்மையில் 100 சதவீத ‘வாட்டர் கேன்’களில் 60 சதவீதம் தண்ணீர் தரமற்றதாக உள்ளது.
இதுபோன்ற தரமற்ற வாட்டர் கேன் தண்ணீரை தொடர்ந்து குடித்து வருவதால் நமது உடம்பும் குறிப்பிட்ட தண்ணீரை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்துக்கு மாறிவிடும். 

ஆனால் திடீரென கோடை வெயிலில் சுற்றி விட்டு ஏதாவது ஒரு இடத்தில் அல்லது உறவினர், நண்பர்கள் வீடுகளில் போர் மற்றும் கிணற்று தண்ணீரால் தயாரிக்கப்பட்ட குளிர்பானங்கள், மோர், ஐஸ் கிரீம் சாப்பிடும்போது தொண்டையில் அலர்ஜி ஏற்படுகிறது. 

இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொண்டை கரகரப்பு, சளி, காய்ச்சல் போன்ற நோயால் பாதிக்கிறார்கள். இது நிமோனியா தொற்றாக மாறி நுரையீரலையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.

நுரையீரல் தொற்று காரணமாக ஏற்படும் நிமோனியா எந்த மருந்துக்கும் கட்டுப்படாத கிருமியாக உருவாகி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

மேலும் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இறந்தவர்களில் அதிகமானோர் சுவாச மண்டல தொற்று நோய் காரணமாக இறந்துள்ளது தெரியவந்துள்ளது. 

நுரையீரலை பாதிக்கும் நிமோனியாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள குளிர் மற்றும் கோடை காலம் என எந்த சீசனிலும் குடிதண்ணீரை காய்ச்சி குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். 

தொண்டை கரகரப்பு பிரச்னையால் பாதிக்கப்படுபவர்கள் காது, மூக்கு, தொண்டை (இஎன்டி) டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இவ்வாறு டாக்டர் இளங்கோ கூறினார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக