பக்கங்கள்

வியாழன், 22 நவம்பர், 2012

உங்களுக்காக உழைக்க தேனீக்கள் தயாராக இருக்கின்றது

உங்களுக்காக உழைக்க தேனீக்கள் தயாராக இருக்கின்றது
தேன், ஒரு அதிக ஊட்டச்சத்து நிறைந்த விரும்பத்தக்க உணவாகும். தேனீக்கள், மலர்த்தேனை சேகரித்து, தேனாக மாற்றி, அதை தேன் கூட்டில் சேமிக்கும்.
 தேன் மற்றும் அதை சார்ந்த பொருட்களின் உபயோகம் அதிகரித்து வருவதால், தேனீ வளர்ப்பு ஒரு தொழிலாக முக்கியமடைந்துள்ளது.தேனீக்கள் வளர்ப்பதன் மூலம் வருமானத்தை ஈட்டுவது மட்டுமில்லாமல், மகசூல் உற்பத்தியை அதிகரிக்கலாம். தென்னந்தோப்புகளில், ஆறு அடிக்கு ஒரு பெட்டி வீதம் தேனீ பெட்டிகளை வைத்து வளர்க்கலாம். ஒரு தேனீ பெட்டியில் ஒரு ராணி தேனீ, 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை தேனீக்கள் இருக்கும்.தேனீக்கள், இந்திய தேனீ, மலைத்தேனீ, கொம்பு தேனீ, அடுக்கு தேனீ மற்றும் கொசு தேனீ என பல்வேறு வகைகளாக வளர்க்கப்படுகின்றன. ஒரு பெட்டியில், 750 மி.லி., முதல் ஆயிரத்து 250 மி.லி., வரை தேன் சேகரிக்கப்படுகிறது.தேனீ பெட்டிகள் தோட்டக்கலைத்துறையின் மூலமாக அரசு மானியத்துடன் கிடைக்கும். அனைத்து தரப்பு விவசாயிகளும், மகளிர் சுயஉதவிக்குழுவினரும் தேனீ வளர்ப்பில் ஈடுபடலாம். இதன்மூலம் நல்ல லாபம் பெறலாம்.
வேப்ப மரப்பூவிலிருந்து கிடைக்கும் தேன் மருத்துவ குணம் உடையது. வயலில் நெல்லிலிருந்து கிடைக்கும் தேன் உடம்பில் உள்ள கொழுப்பை கரைக்கிறது. ஒவ்வொரு பூக்களிடமிருந்து கிடைக்கும் தேன் ஒவ்வொரு மருத்துவ குணம் உடையதாக இருக்கிறது. நச்சுக் கலக்காத இயற்க்கையாக கிடைக்கும் பொருட்களில் தேனும் ஒன்று. எனவே தேனீ வளர்ப்புக் கலையை நாம் கற்றுக்கொண்டால் மறைமுகமாக இயற்க்கை அன்னையை பாதுகாத்துக்கொள்கிறோம். எனவே துணிந்து தேனி வளர்ப்பு தொழிலைக் கற்றுக்கொண்டு உங்கள் பணத்தை அதில் முதலீடு செய்யுங்கள். உங்களுக்காக உழைக்க தேனீக்கள் தயாராக இருக்கின்றது.
உற்பத்தி முறை
தேனீக்களை வீட்டிலோ அல்லது பண்ணைகளிலோபெட்டிகளில்வளர்க்கலாம்.
தேனீ வளர்ப்பதற்கு தேவையான உபகரணங்கள்

கூடு : இதுஒரு நீளமான சாதாரண பெட்டியாகும்இதன் மேல் வாட்டில்,பல அடுக்குகளை கொண்டுள்ளதுதோராயமாக 100 செ.மீ நீளம், 45 செ.மீஅகலம் மற்றும் 25 செ.மீ உயரத்தை உடையதுஇந்த பெட்டியின் மொத்தம்செ.மீ ஆகும்தேனீக்கள் உள்ளே நுழைவற்கு 1 செ.மீ அகலமுடையஓட்டைகளை கொண்டுள்ளதுமேல் அடுக்குகள் அடர்ந்த தேன் கூட்டைஅமைப்பதற்கு தேவையான மொத்தத்தை பெற்று இருக்க வேண்டும்சுமார்1.5 செ.மீ மொத்தம் இதற்கு போதுமானதுதேனீக்கள் தேன் கூட்டை கட்டஏதுவாகஅடுக்குகளுக்கிடையேயான இடைவேளி 3.3 செ.மீ இருத்தல்நல்லது.

புகைப்பான் : இது தேனீ வளர்ப்பில்,  இரண்டாவது முக்கிய உபகரணம்ஆகும்இதைசிறிய தகரடப்பாவில் இருந்து செய்து கொள்ளலாம்இதனைதேனீக்களை கட்டுபடுத்துவதற்கும் மற்றும் தேனீக்கள் நம்மை கடிக்காமல்இருப்பதற்கும் பயன்படுத்தலாம்.

துணி : நாம் வேலை செய்யும் பொழுதுநம் கண்கள் மற்றும் மூக்குகளைபாதுகாக்க உதவும்.

கத்தி : மேல் அடுக்குகளை தனிப்படுத்துவதற்கும் தேன் கூடுகளைபிரிக்கவும் பயன்படுத்தலாம்.

இறக்கை : தேனீக்களை கூட்டிலிருந்து அப்புறபடுத்துவதற்கு

இராணி தேனீ பிரிப்பான்
தீப்பெட்டி

தேன்கூடுகளை நிறுவும் முறை
·         தேன் வளர்க்கும் இடமானதுநல்ல வடிகால் வசதியையுடைய திறந்தஇடங்களாகவும்குறிப்பாக பழத்தோட்டத்திற்கு அருகாமையிலும்மேலும்நிறைய மதுரம்மகரந்தம் மற்றும் நீர் கிடைக்கக்கூடிய இடமாகவும்இருக்க வேண்டும்.
·         சூரிய ஒளியிலிந்து பாதுகாப்பு மிக அவசியமானதாகும்ஏனெனில்அப்பொழுதுதான்மிதமான வெப்பத்தை கொடுக்க இயலும்.
·         தேன் கூட்டிற்குள் எறும்பு ஏறுவதை தடுக்க தேன் கூட்டின் கால்கள்தண்ணீருள்ள சிறு பாத்திரத்தில் நனையுமாறு இருத்தல் வேண்டும்.
·         வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாக்கும் வகையில் தேனீக்களின்காலனிகளைகிழக்கு திசை நோக்கி அமையுமாறு தேன் கூட்டை அமைக்கவேண்டும்.
·         தேனீக்களின் காலனிகளைகால்நடைகள்ஏனைய விலங்குகள் ,பரபரப்பான வீதிகள் மற்றும் தெரு விளக்குகள் இவைகளிலிருந்து தூரத்தில்அமைக்க வேண்டும்.

தேனீ காலனிகளை அமைக்கும் முறை
·         தேனீ காலனிகளை அமைக்க இயற்கையான கூட்டில் உள்ள தேனீக்களைமாற்றவோ அல்லது வழி செல்லும் தேனீக்களை கவரவோ செய்யவேண்டும்.
·         இதற்கு முன்புபெட்டிகளை பழைய கூட்டின் உதிரிகளை கொண்டோஅல்லது தேனீ மெழுகினைக் கொண்டோ தடவினால் பெட்டியானதுதேனீக்களுக்கு பழக்கப்பட்ட வாசனையை உடையதாக அமைக்கப்படும்.முடிந்தால்இராணீ  தேனீயை பிடித்து கூட்டினுள் வைத்தால்இது ஏனையதேனீக்களை கவர்ந்து இழுக்கும்.
·         சில வாரங்களுக்கு பாதி கப் சுடுநீரில் பாதி கப் சர்க்கரையை கலந்துதேனிக்களுக்கு உணவு அளிப்பதன் மூலம் பெட்டியுனுள்வேகமாககூட்டினை கட்ட இயலும்.

காலனி நிர்வாகம்
·         தேன் அதிகமாக கிடைக்கும் காலங்களில்வாரம் ஓரு முறை அதிகாலைவேளையில்பெட்டிகளை கண்காணிப்பது அவசியம்.
·         பெட்டியினைகூரைஉற்பத்தி அறைதளம் என்ற முறையில் சுத்தம்செய்ய வேண்டும்.
·         வலிமையான ராணீ தேனீஉற்பத்தி மேம்பாடுதேன் மற்றும் மகரந்தசேகரிப்புராணீ தேனீயின் அறைதேனீக்களின் வலிமைமற்றும் ஆண்தேனீயின் வளர்ச்சி ஆகியவற்றை கண்காணிக்க  தேனீக்களின்காலனிகளை தவறாமல் சோதிப்பது அவசியம்.
·         கீழே உள்ளதேனீயின் எதிரிகளின் தாக்குதல் இருக்கிறதாஎன்று சோதிக்கவேண்டும்.
மெழுகு மாத் : பெட்டியிலுள்ள புழுபட்டு வலைகளை நீக்க வேண்டும்.
மெழுகு வண்டு : வளர்ந்த வண்டுகளை சாகடிக்க வேண்டும்.

மைட் : புதிதாக தயாரித்த பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசலில்நனைக்கப்பட்ட பஞ்சுத் துண்டை கொண்டுபிரேம் மற்றும் தரைகளைசுத்தம் செய்ய வேண்டும்.


தேன்குறைவாக கிடைக்கும் காலத்தில் நிர்வாகம்.
·         தேன் கூடு அமைக்க தேவைப்படும் அடிப்படை தகட்டை அகற்றிஇளம்வளமான தேனீக்களை உற்பத்தி அறையில் கூட்டாக வைக்கவும்
·         தேவைப்பட்டால் தடுப்பு போர்டுகளை பயன்படுத்தவும்
·         ராணி தேனீ மற்றும் ஆண் தேனீ செல்கள் தென்பட்டால் அழிக்கவும்
·         ஒரு காலனிக்கு, 200 கிராம் என்ற விதத்தில் சர்க்கரை கரைசல் (1:1) இந்தியதேனீக்களுக்கு வாரம் ஒரு முறை அளிக்கவும்
·         எல்லா காலனிகளுக்கும்ஒரே சமயத்தில் அளிப்பதன் மூலம் திருட்டைதவிர்க்கலாம்.

தேன் நிறைய கிடைக்கும் காலங்களில் நிர்வாகம்
·         இக்காலத்திற்கு முன்னரேகாலனிகளை தகுந்த வலிமையுடன் வைத்துஇருக்க வேண்டும்
·         தேன் கூடு அமைக்கத் தேவைப்படும் முதல் அடிப்படை தகடு  மற்றும்இளம் தேனீக்கள் இருக்கும் அறைகளிடையே  தகுந்த இடைவெளி அளிக்கவேண்டும்
·         இளம் தேனீக்கள் இருக்கும் அறையிலேயே ராணி தேனீ இருக்குமாறு,தேன் கூடு அமைக்க தேவைப்படும் முதல் அடிப்படை தகடு  மற்றும் இளம்தேனீக்கள் இருக்கும் அறைக்கிடையே இராணி தேனீ பிரிப்பான் தாளைஇடவும்
·         காலனி வாரம் ஒரு முறை சோதித்துதேன் அதிகமுள்ள பிரேம்களை தேன்கூடு அமைக்க தேவைப்படும் அடிப்படை தகட்டின் பக்கவாட்டிற்குஎடுத்துசெல்ல வேண்டும்எந்த ஒரு பிரேமில், 3\4 பாகம் தேன், 1\4 பாகம் மூடப்பட்டஅறைகள்இருக்கிறதோ அதனை உற்பத்தி அறையிலிருந்து வெளியேஎடுத்துவிட்டு அந்த இடங்களில் காலியான பிரேம்களை இட வேண்டும்
எந்த ஒரு கூடுகள் முழுவதுமாக மூடப்பட்டு அல்லது 2\3 மூடப்பட்டுஇருக்கிறதோஅவைகளை தேன் எடுப்பதற்கு எடுத்து கொள்ளலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக