பக்கங்கள்

ஞாயிறு, 25 நவம்பர், 2012

பல பெயர்களில் சபைகள் எப்படி தோன்றின?

பல பெயர்களில் சபைகள் எப்படி தோன்றின?


கத்தோலிக்க சபை ஆரம்பமானது எப்படி? (How the Catholic Church Developed):
இந்த கத்தோலிக்க சபையின் உபதேசம் 3ம் நூற்றாண்டு வரை அறியப்படாத ஒன்றாக இருந்தது. பேதுருவிற்கு பின் போப் அந்த ஸ்தானத்தைப் பெற்றதாக அவர்களின் கூற்று. இந்த வரிசையில் ரோம கத்தோலிக்கம்தான் உண்மையான சபை என்று கோருகின்றனர். மேற் கூறப்பட்டவை இரண்டு காரணங்களால் (உண்மையினால்) பொய் என நிரூபிக்கப்படுகின்றது. 1. அப்போஸ்தலருடைய பணி(Apostles Office) யாருக்கும், அவர்களுக்குப்பின் தொடர்ந்து வழங்கப்படும் என்று புதிய ஏற்பாட்டில் ஆதாரம் இல்லை. 2. மேலும், ரோம கத்தோலிக்க பிஷப்கள், எப்பொழுதுமே புதிய ஏற்பாட்டின் போதனையுடன் முரண்பாடாகவே போதித்து வந்தனர். மேலும் அவர்கள் கடைப்பிடித்ததும் அப்போஸ்தலரிடமிருந்து முரண்பாடாகவே இருந்தது. ரோம கத்தோலிக்கர்களின் புகழ்ப்பெற்ற கூற்றாகியபேதுருவின் வழியில் பின் தொடர்ந்து வந்தவர்கள்தான் போப் என்பது, அவர்கள் அப்போஸ்தலரின் போதனை மற்றும் பயிற்சியில் இருந்து வேறுபடுவதினால் வலுவிழக்கிறது. மேலும் சத்தியம் ஒன்றே பின் தொடர்கிறது என்பது வேதாகம போதனை.
வழிவிலகுதல் முன்னறிவிக்கப்பட்டது: (1தீமோ 4:1-3)ஐ வாசிக்கவும்.
ரோமக் கத்தோலிக்க சபை புதிய ஏற்பாட்டின் சபை அல்ல. மேலும் அது தன்னுடைய வரலாற்றின்படியாககூட சபை அல்ல. அது விசுவாசித்திலிருந்து வழி விலகியதால் உண்டான ஒன்று. போப் என்பவர் பேதுருவின் வழிவந்தவர்கள் என்னும் கூற்று எந்த வகையிலும் ஆதாரமற்றது. முதலாவது, வேதாகமம் பேதுருவை முதன்மைப்படுத்தி எதுவும் கூறவில்லை. (அதாவது அவர் அப்போஸ்தலர்களில் எல்லாம் முதன்மையானவர் என்று) கல்லின் மீது என் சபையைக் கட்டுவேன் என்று இயேசு சொன்னது பேதுருவை அல்ல. (மத் 16:18,1கொரி 3:11ஐ வாசியுங்கள்) மேலும் அவர் ரோமபுரியில் இருந்தார் என்பதற்கு ஆதாரம் இல்லை. (இங்குதான் அவர் ரோமபுரியின் முதல் பிஷப்பாக இருந்தார் என்கின்றனர்) எல்லாவற்றிற்கும் மேலாக, புதிய ஏற்பாட்டில் ஒருவருடைய அலுவல் (Office)மற்றவருக்கு தொடர்ந்து வழங்கப்பட்டதாக இல்லை. மாறாக, சத்தியமே தொடர்ந்து வழங்கப்பட்டது.
ஆங்கிலிக்கன் (எபிஸ்கோபல்) சபையின் ஆரம்பம்:- (The Begining of the Anglican  (Episcopal) Church):
நாமகர்ண சபைகளைப்பற்றிப் படிக்கும்போது, இங்கிலாந்தின் சபையின் வரலாற்றை ஆராய்வது அவசியம். அமெரிக்காவின் அநேக மதப்பிரிவுகள், இங்கிலாந்து மற்றும் அதின் இராஜ்யங்களில் இருந்து வந்தவையே. இங்கிலாந்தின் எல்லா கிறிஸ்தவ கூட்டங்களும், விட்பீ (Whitby) உள்ள சினாடில் 644 கி.பி.யில் ரோம கத்தோலிக்கத்துடன் கைக்கோர்த்தன. அடுத்த  நூற்றாண்டுகளாக இங்கிலாந்து ரோமுடன் தொடர்புக்கொண்டிருந்தது.
மார்ட்டின் லூத்தர், ரோம கத்தோலிக்கத்தில் இருந்து பிரிந்து சிறிது காலத்திற்குள் இங்கிலாந்து சபையும் ரோம கத்தோலிக்கத்தில் இருந்து பிரிந்தது. இங்கிலாந்து சபை உருவாகக் காரணமாக இருந்தவர் ஹென்றி VIII. இவர் கால்வின் அல்லது லூத்தரைப் போன்று அல்லாமல் மென்மையாகப் போராடியவர். ஹென்றி VIII மத உபதேசங்களை நன்கு கற்று, அதில் ஆவலும் கொண்டவர். இவருடைய ஆட்சியின்கீழ் அநேக ப்ராடஸ்டன்ட் தலைவர்கள் மரித்ததினால், இங்கிலாந்தின் நீரோஎன்று அழைக்கப்பட்டார்.
இங்கிலாந்தில் புரட்சிக்கு முக்கிய காரணம், ஹென்றி மற்றும் கேத்ரினின் திருமணம். இவள் பட்டத்திற்கு ஒரு ஆண் வாரிசைப் பெற்றுத்தரவில்லை. இவர்களின் ஒரே வாரிசு மேரி இளவரசி.ஆனால் இந்த நேரத்தில் ஒரு ராணியை இங்கிலாந்து விரும்பவில்லை. 18 ஆண்டுகளுக்குப்பின் தனது திருமணம் சபிக்கப்பட்டது என ஹென்றி நினைத்தார். தன்னை மணப்பதற்கு முன் சில காலமே வாழ்ந்த தன்னுடைய சகோதரனை கேத்ரின் திருமணம் செய்திருந்தார். தன்னுடைய சகோதரனின் மனைவியைத் திருமணம் செய்ததே அந்த சாபம் என்று அதற்கு அவர் லேவி 20:21ஐக் காரணம் காட்டினார்.
"ஒருவன் தன் சகோதரன் மனைவியை விவாகம் பண்ணினால், அது அசுத்தம், தன் சகோதரனை நிர்வாணிமாக்கினான், அவர்கள் சந்தானமற்றிருப்பார்கள்". (லேவி 20:21).
இதனால் ஹென்றி, கேத்ரினுடனான தன்னுடைய திருமணத்தை ரத்து செய்யுமாறு போப் இடம் கோரினார். போப் இந்த லேவியராகம சாபத்தை ஏற்றுக்கொண்டாலும், கேத்ரின் உறவினர் ரோம ராஜ்யத்தை ஆண்டதினால் விவாகரத்து செய்ய மறுத்தார்.
  தெளிவாக, இங்கிலாந்து சபை (ஆங்கிலிக்கன்) புதிய ஏற்பாட்டு சபை அல்ல. புதிய ஏற்பாட்டு சபை கத்தோலிக்கமோ, ப்ராடஸ்டன்டோ அல்ல. ஆனால் இந்த ஆங்கில சபை கத்தோலிக்கமும், ப்ராடஸ்டன்டும்,
  புதிய ஏற்பாட்டு சபை திருமுழுக்குப் பெற்ற விசுவாசிகளின் சரீரம். ஆனால் இந்த ஆங்கில சபை, சிறு குழந்தையிலேயே தெளிக்கப் பெற்ற விசுவாசிகள் மற்றும் விசுவாசியில்லாதவரின் கூட்டம்.
  புதிய ஏற்பாட்டு சபை கிறிஸ்துவினால் ஆரம்பிக்கப்பட்டது. ஆங்கிலிக்கன் சபை ஹென்றி VIIIராஜாவால் ஆரம்பிக்கப்பட்டது.
  புதிய ஏற்பாட்டு சபை கிறிஸ்துவினால் தலைமை ஏற்கப்பட்டது. ஆங்கிலிக்கன் சபையின் தலைவர் இங்கிலாந்தின் இராஜா (அல்லது ராணி).
  புதிய ஏற்பாட்டு சபைக்கு உலகத்தில் தலைமையகம் கிடையாது. இந்த ஆங்கிலிக்கன் சபையின் தலைமையகம் இங்கிலாந்தின் கான்டிபரியில் உள்ளது.
மெத்தடிஸ்ட் சபை- முரண்பாடுகள்: (Methodist Church-Contradictions)
முதலாவது, மெதடிஸ்ட் கொள்கையாக 2:24-26 உடன் முரண்படுகிறது.
ஆதலால், மனுஷன் விசுவாசத்தினாலே மாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே.
அந்தப்படி ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறு வழியாய் அனுப்பி விட்டபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்?
அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்தாயிருக்கிறது.
ஏனென்றால் விசுவாசம்மட்டுமே போதுமான உபதேசம் மற்றும் ஆறுதல் நிறைத்த முழுமையானது என மெதடிஸ்ட் ஒழுக்கம் (Methodist Discipline) கூறுகின்றது.
மற்றொன்று, வேதாகமம் ஒரு திருமுழுக்கைப் (ஞானஸ்நானம்) பற்றி கூறுகின்றது. ஆனால் மெதடிஸ்ட் ஒழுக்கம் 3 வகையான ஞானஸ்நானத்தைப் போதிக்கின்றது.
வேதாகமம் போதிக்கும் உண்மையான திருமுழுக்கு (மூழ்குதல்) அந்த 3ல் ஒன்றாக இருப்பினும், அது எப்பொழுதாவதுதான் பயிற்சி செய்யப்படுகிறது. பொதுவாக தெளித்தல் ஞானஸ்நானமேகொடுக்கப்படுகிறது. மேலும் கொலோ 2:12, ரோம 6:3,4 திருமுழுக்கே வேதாகமத்தின்படியானது என்கிறது.
மேலும், புதிய ஏற்பாட்டில் எந்த ஒரு அப்போஸ்தலரையோ, தீர்க்கதரிசியையோ, அங்கத்தினரையோரெவரென்ட் (Rev) என்று அழைத்ததாக இல்லை. மாறாக, சகோதரர் அல்லது ஊழியக்காரர் என்றே அழைக்கப்பட்டனர். மற்றும் புதிய ஏற்பாட்டில் இரட்சிக்கப்பட்டவர்கள் கிறிஸ்தவர்கள் (அப் 11:26) என்று மட்டுமே அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு வேறு சிறப்புப் பெயர் (மெதடிஸ்ட்) காணப்படுவதில்லை.(1பேதுரு 4:16) நாம் ஒவ்வொருவரும் பெரோயர் பட்டணத்தாரைப்போல தொடர்ந்து படிக்கவேண்டும் (அப் 17:11) மற்ற எதையும்விட நாம் தேவ வார்த்தையையே விரும்புவோம்.
நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். (யோ 14:15). இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான். அவனில் என் பிதா அன்பாயிருப்பார். நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம் பண்ணுவோம். (யோ 14:23).
பாப்டிஸ்ட்களின் வரலாறு: (A History of the Baptists):
சில உயரிய நோக்கங்களுடன், சில நேர்மையான மனிதர்கள் அவர்களுடைய காலத்தில் இருந்த குறைகளினால் இந்த பாப்டிஸ்ட் இயக்கத்தை ஆரம்பித்தனர். ஆனாலும், உண்மையான கிறிஸ்தவத்தைப் பற்றி அவர்கள் புரிந்துக்கொண்டதில் குறையிருந்தது. ஆகையால், வேதாகமத்தின் அதிகாரமின்றி அவர்கள் ஒரு புதிய நாமகர்ணக் கூட்டத்தை தொடங்கினர்.
தேவனால் அனுப்பப்பட்ட மனிதனாகிய ஸ்நானகன் என்று அழைக்கப்பட்ட (மத் 3:1) யோவான் (யோ 1:6) ஞானஸ்நானம் கொடுத்ததினால், தற்பொழுது உள்ள அவர் செயலினால் தொடங்கப்பட்ட இயக்கத்திற்கும், அவருக்கும் சம்பந்தம் இல்லை. யோவான் ஸ்நானகன் மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானம் கொடுத்தார். தங்களுடைய சபை கிறிஸ்துவின் காலத்துடன் தொடர்புடையது என்றும், தாங்களே உண்மையான புதிய ஏற்பாட்டு சபை என்றும் கோருகின்றனர்.
ஆனால் கி.பி.1600ல் English Reformation Movementன் காரணமாக பாப்டிஸ்ட் சபைகள் தோன்றின. சுமார் 1606ல், ஆங்கில சபையின் பொதுக்கட்டுப்பாட்டை எதிர்த்து சிலர் வெளியே வந்தனர். இந்த இயக்கத்தின் ஒரு தலைவர் John Smyth (1554-1612) இவர் புதிய ஏற்பாட்டின்படி குழந்தை ஞானஸ்நானம் தவறு என்றும், தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பக்கூடியவர்கட்கே திருமுழுக்குத் தகும் என்று கூறினார். இதன் விளைவாக, ஞானஸ்நானத்தின் முழு அர்த்தமும் தெரியாத நிலையில்,Smyth தன் தலையில் தானே தண்ணீர் ஊற்றி ஞானஸ்நானம் எடுத்துக்கொண்டார். பின்பு அவர், அவருடன் சேர்ந்த 40 பேருக்கும் இதேப்போன்று ஞானஸ்நானம் கொடுத்து ஒரு புது இயக்கம் -பாப்டிஸ்ட் சபை, John Smyth பாஸ்டராகக் கொண்டு ஆரம்பமானது.
பாப்டிஸ்டின் மற்றொரு பிரிவு 1616ல் தோன்றியது. இது ஹென்றி ஜேக்கப் (Hendry Jacob) (1563-1642) என்பவரால் லண்டனில் ஆரம்பமானது. இந்தக்கூட்டம் ஆங்க்லிக்கன் சபையோடு கொஞ்சம் உறவு வைத்திருந்தது. 1638ல் ஜான் ஸ்பில்ஸ்பரி (John Spilsbury) ஒரு புதிய கூட்டத்தை ஆரம்பித்தார். இதுகுறிப்பிட்ட பாப்டிஸ்ட் (Particular Baptist) என்று அழைக்கப்பட்டது. மேலும் இவர்கள் கால்ஷனிஸ்ட் கொள்கையான தேவன் உலகத் தோற்றத்திற்கு முன் தெரிந்துக்கொண்ட சில பேருக்காக மாத்திரமே இயேசு மரித்தார் என்பதை ஏற்றுக்கொண்டனர். மேலும் இவர்கள் திறந்த அங்கத்துவம் (Open Membership) அதாவது பிற சபைகளில் இருந்து எந்தவித மறுதிருமுழுக்குமின்று சேர்த்துக் கொண்டனர். இன்னுமொரு பாப்டிஸ்ட் சபை 1639ல் ரோஜர் வில்லியம்ஸ் என்பவரால் ரோட் தீவில் (Rhode Island)ஆரம்பிக்கப்பட்டது.
இன்று பாப்டிஸ்ட் சபைகள் சுமார் 100க்கும் மேற்பட்ட பிரிவுகளுடன் உள்ளனர். (www.baptist.org)இவர்களில் தாராளமான கொள்கை உடைய அமெரிக்க பாப்டிஸ்ட்லிருந்து மிகவும் கட்டுப்பாடானதெற்கத்திய பாப்டிஸ்ட் வரை ஆவார்.
1. 1 கொரி 1:10ல் தடை செய்யப்பட்டதை செய்பவர்கள் இந்த பாப்டிஸ்ட்கள். மேலும் அவர்கள்கிறிஸ்தவர்கள் என்றழைக்கப்படுவதைவிட பாப்டிஸ்ட் என்றே அழைக்கப்பட விரும்புகின்றனர்.
2. வசனத்திற்குப் புறம்பாக ஒரு பாஸ்டர் மற்றும் உதவிக்காரர்களின் குழுவுடன் (Deacons) இவர்கள் உள்ளனர். சுயாதீனமான சபைகள் என்று இவர்கள் கூறினாலும், தெற்கத்திய பாப்டிஸ்ட்கன்வென்ஷனில் (Southern Baptist Convention) முடிவு செய்யப்படுவதையே சில நேரங்களில் கடைப்பிடிக்கின்றனர்.
3. புதிய ஏற்பாட்டில் இல்லாத ஒரு ஆராதனையை ஏறெடுக்கின்றனர். ஆராதனையில் இசை கருவிகளை பயன்படுத்துகின்றனர். இது புதிய ஏற்பாட்டு சபையில் இல்லை (எபே 5:19,கொலோ 3:16).
4. இரட்சிப்பு விசுவாசத்தின் மூலமே என்பதும் இவர்களின் கொள்கை. (மாற்கு 16:16,அப் 2:38,22:16) மேலும், சபையில் அங்கத்தினராக ஒருவர் வேண்டுமானால் மற்ற அங்கத்தினர்களில் வாக்குப்பதிவின்அடிப்படையில் நடந்தது.

From: jamakaran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக