பக்கங்கள்

செவ்வாய், 11 டிசம்பர், 2012

சத்து மாவு தயாரிப்பது எப்படி

சத்து மாவு தயாரிப்பது எப்படி
பப்ஸ், பீசா போன்ற மேற்கத்திய உணவுகள் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்கின்றனர் டாக்டர்கள். குழந்தைகளுக்கு இந்த உணவுகளை பழக்குவதால் அவர்களின் உடல்நலம் கெடும் வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது. இந்த உணவுகளுக்கு மாற்றாக இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது. காலை, மாலை வேளைகளில் டீ, காபி போன்றவற்றை தவிர்த்து  சத்துமாவு கூழ் பருகும் பழக்கம் அதிகரித்துள்ளது. எனவே சத்துமாவு தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்று கூறுகிறார் திருப்பூர் மாவட்டம் உடுமலை தங்கம்மாள் ஓடை எம்.பி நகரை சேர்ந்த ஷகிலாபேகம். அவர் கூறியதாவது:

கொங்கு மண்டலத்தில் பல வீடுகளில் தலைமுறை தலைமுறையாக சத்துமாவு கூழ் பருகுவது வழக்கத்தில் உள்ளது. தினசரி காலை ஒரு டம்ளர் தண்ணீரை  கொதிக்க வைத்து அதில் 2 ஸ்பூன் சத்து மாவை போட்டு காய்ச்சி டீ, காபிக்கு பதிலாக குடிப்பார்கள். சத்துமாவுக்கு இருக்கும் தேவையை அறிந்து போகன்வில்லா மகளிர் சுய உதவிக் குழு மூலம் தயாரித்து விற்க முடிவு செய்தோம். எங்களுக்கு தனியாக பயிற்சி தேவைப்படவில்லை. வீட்டில் தயாரித்த அனுபவமே கைகொடுத்தது. நாங்கள் தயாரித்த சத்து மாவை தெரிந்தவர்களுக்கு  குறைந்த லாபத்தில் விற்றோம். 

எங்கள் தயாரிப்பின் சுவை, மணம், தரம் அவர்களை கவர்ந்தது.தானியங்களை முளை கட்டி, காய வைத்து, அரைக்கும் வேலை மிச்சமானதால் தொடர்ந்து எங்களிடம் வாங்கினர்.  இதன்மூலம் எங்கள் தயாரிப்பு பிரபலமானது. பின்னர் படிப்படியாக புதிய வாடிக்கையாளர்களுக்கும் எங்கள் மாவை அறிமுகப்படுத்தினோம். கடைகளுக்கும் விற்றோம். பெண்கள் வீட்டில் இருந்தவாறே மேற்கொள்ள ஏற்ற தொழில் இது. மக்களுக்கு ஆரோக்கியமான உணவை விற்கிறோம் என்ற மனநிறைவு இத்தொழிலில் உண்டு.

சத்து மாவு தயாரிக்க பெரிய பயிற்சி எதுவும் தேவையில்லை. செய்வதை ஒரு முறை பார்த்தாலே கற்றுக் கொள்ளலாம். சமையலில் திறமை உள்ளவர்களுக்கு அதுவும் தேவையில்லை. செய்முறையை படித்து பார்த்தே செய்து விடுவார்கள். 

தயாரிக்கும் முறை 

தேவையான பொருட்கள்: ராகி 2 கிலோ (ரூ.34), சோளம் 2 கிலோ (ரூ.40), கம்பு 2 கிலோ (ரூ.32), பாசிப்பயறு அரை கிலோ (ரூ.28), கொள்ளு அரை கிலோ (ரூ.10), மக்காசோளம் 2 கிலோ(ரூ.28), பொட்டுக்கடலை ஒரு கிலோ (ரூ.70), சோயா ஒரு கிலோ (ரூ.58), தினை அரை கிலோ (ரூ.18), கருப்பு உளுந்து அரை கிலோ (ரூ.30), சம்பா கோதுமை அரை கிலோ (ரூ.30), பார்லி அரை கிலோ (ரூ.30), நிலக்கடலை அரை கிலோ (ரூ.40), அவல் அரை கிலோ (ரூ.40), ஜவ்வரிசி அரை கிலோ (ரூ.25), வெள்ளை எள் 100 கிராம் (ரூ.12), கசகசா 50 கிராம் (ரூ.30), ஏலம் 50 கிராம் (ரூ.50), முந்திரி 50 கிராம் (ரூ.25), சாரப்பருப்பு 50 கிராம் (ரூ.25), பாதாம் 50 கிராம் (ரூ.25), ஓமம் 50 கிராம் (ரூ.15), சுக்கு 50 கிராம் (ரூ.15), பிஸ்தா 50 கிராம் (ரூ.20), ஜாதிக்காய் 2 (ரூ.5), மாசிக்காய் 2 (ரூ.5), 
ராகி, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். 

தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளைவிட்டு இருக்கும். அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைத்து, 4 மணி நேரம் ஆற வைத்தால் சத்து மாவு தயார். 12 கிலோ மாவு கிடைக்கும். அதை கால்கிலோ, அரை கிலோ, ஒரு கிலோ அளவு பிளாஸ்டிக் கவரில் அடைத்து லேபிள் ஒட்டி மற்றொரு கவர் இட்டால் விற்பனைக்கு தயார்.

சத்து மாவு தயாரிக்க தேவையான பொருட்கள் மளிகைக் கடைகளில் கிடைக்கின்றன. தனியாக இடம் எதுவும் தேவையில்லை. வீட்டிலேயே தானியங்களை ஊற வைத்து, முளை கட்டலாம். வீட்டு வளாகத்தில் காய வைக்கலாம். தானியங்களை வீட்டு மிக்சியில் அரைத்தால் சரியாக வராது. மாவு மில்லில் கொடுத்து அரைக்க வேண்டும். 

பயன்கள்

ஒரு நபருக்கு ஒரு டம்ளர் தண்ணீர் வீதம் கொதிக்க வைக்க வேண்டும். ஒருவருக்கு 2 ஸ்பூன் மாவு வீதம் தண்ணீரில் கலந்து 2 நிமிடம் கொதிக்க  வைத்தால் சத்து மாவு கூழ் தயாராகி விடும். அதில் அவரவர் விருப்பப்படி இனிப்பு அல்லது உப்பு அல்லது உப்பு, மிளகுபொடி சேர்த்து பருகலாம். எதுவும் கலக்காமல் அப்படியேகூட குடிக்கலாம்.காலையில் 2 டம்ளர்  சத்துமாவு பானம் குடித்தால் காலை சாப்பாடு பூர்த்தியாகி விடும். 

இதன்மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது. கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம். முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.

6 மாதம் கெடாது 

சத்துமாவு காயவைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 6 மாதம் வரை கெடாது. பொதுவாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 கிராம் வரை பயன்படுத்தினால் ஒரு கிலோ பாக்கெட் 20 நாளில் தீர்ந்து விடும். இதனால், கெட்டு விடுமோ என்ற கவலையும் தேவையில்லை.

உற்பத்தி செலவு: தயாரிக்க எடுத்த 15 கிலோ தானியங்களுக்கான செலவு ரூ.740. அரவை கூலி கிலோ ரூ.4 வீதம் ரூ.60. 1 ஆள் கூலி ரூ.150, ஒரு நாள் உற்பத்தி செலவு ரூ.950. மாதத்தில் 25 நாள் உற்பத்தி செலவு ரூ.23,750, விற்பனை தொடர்பான இதர செலவுகள் மாதம் ரூ.1,250. மொத்த மாத செலவு ரூ.25,000.

வருவாய்: 15 கிலோ தானியங்களை காயவைத்து அரைத்தால் 12 கிலோ சத்து மாவு கிடைக்கும். ஒரு கிலோ ரூ.120 வீதம் விற்கலாம். இதன் மூலம் ஒரு நாளைக்கு வருவாய் ரூ.1,440. 25 நாளில் வருவாய் ரூ.36,000. செலவு போக லாபம் ரூ.11,000.

சந்தை வாய்ப்பு : பலசரக்கு கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், காதி, சர்வோதய விற்பனை நிலையங்களுக்கு சப்ளை செய்யலாம். சத்துமாவை  தற்போது மக்கள் விரும்பி வாங்கு கிறார்கள். குழந்தைகளுக்கு ஏற்ற உணவு என்பதால் விற்பனை வாய்ப்புக்கு பஞ்சமில்லை

திங்கள், 10 டிசம்பர், 2012

Is tithing compulsory? A court scene..


Is tithing compulsory? A court scene..


இடம்: நீதிமன்றம்
நேரம்: காலை 11.00 மணி
பாத்திரங்கள்: நீதிபதி மற்றும் பாஸ்டர் ஜோன்ஸ்
நீதிபதி: பாஸ்டர்.ஜோன்ஸ் அவர்களே! நீங்கள் உங்கள் திருச்சபைக்கு வரும் மக்களிடம் கடந்த 20 ஆண்டுகளாக அவர்களது வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை இறைவன் பெயரைச் சொல்லி ஏமாற்றிப் பெற்றதாகவும். தசமபாகம் தருபவர்களை இறைவன் ஆசீர்வதிப்பார் என்று நயங்காட்டியும் தராதவர்கள் மீது தேவனுடைய சாபம் வருமென்று மிரட்டியும் தசமபாகத்தைப் பெற்றதாக தங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது குற்றத்தை நீங்கள் ஒப்புக் கொள்ளுகிறீர்களா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: கனம் நீதிபதி அவர்களே! இந்தக் குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன், எமக்கு இறைவன் அருளின வேதம் எதைச் சொல்லுகிறதோ அதையே நான் என் மக்களுக்கு போதித்தேன். ஆபிரகாம் மெல்கிசேதேக்கிற்க்கு தசமபாகம் கொடுத்தான் தேவன் அதினிமித்தம் அவனை ஆசீர்வதித்தார். அவன் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளையுடைய சீமானாயிருந்தான் என்று வேதம் கூறுகிறது.
நீதிபதி: அது சரி அல்ல! ஆதியாகமம் 13:2 இல் தான் ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளையுடைய சீமானாயிருந்தான் என்று வேதம் கூறுகிறது.
பாஸ்டர்.ஜோன்ஸ்: ஆம்! அதைத்தானே நானும் கூறுகிறேன்?
நீதிபதி: அந்த வசனம் ஆதியாகமம் 13 ஆம் அதிகாரத்தில் வருகிறது. ஆனால் ஆபிரகாம் மெல்கிசேதேக்கிற்கு தசமபாகம் கொடுத்தது அதற்கு அடுத்த அதிகாரத்தில்தான் வருகிறது (ஆதி14:20) அப்படியானால் மெல்கிசேதேகிற்கு தசமபாகம் கொடுப்பதற்க்கு முன்னமே ஆபிரகாம் ஐசுவரியவானாய் இருந்தான் என்பது தெளிவாக இருக்கிறதல்லவா?

பாஸ்டர்.ஜோன்ஸ்: ஆம்! நீங்கள் சொல்வதும் சரிதான்.
நீதிபதி: அப்படியானால் ஆபிரகாமின் பொருளாதார ஆசீர்வாதம் தசமபாகம் கொடுத்ததினால் வந்ததல்ல என்பதை ஒப்புக் கொள்ளுகிறீர்களா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: (பதில் இல்லை)

நீதிபதி: பாஸ்டர் ஜோன்ஸ் அவர்களே! ஆபிரகாம் தசமபாகம் கொடுத்ததினால் தேவன் அவனை ஆசீர்வதித்தார் என்று சொல்லுகிறீர்கள். அப்படியானால் ஆபிரகாம் எத்தனை முறை மெல்கிசேதேகிற்கு தசமபாகம் கொடுத்ததாக வேதத்தில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது?
பாஸ்டர்.ஜோன்ஸ்: ஒரே ஒரு முறைதான்.
நீதிபதி: அவன் மாதந்தோறும் கொடுத்ததாகப் பதிவு செய்யப்படவில்லை அல்லவா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: இல்லை

நீதிபதி: சரி, ஆபிரகாம் தான் தசமபாகமாகச் செலுத்தியவற்றை எங்கிருந்து பெற்றான்?

பாஸ்டர்.ஜோன்ஸ்: அவை அவனுக்கு யுத்தத்தில் மீட்கப்பட்ட பொருளாகக் கிடைத்தவை.
நீதிபதி: அப்படியானால் அவன் தனது சுய சம்பாத்தியமான வருமானத்திலிருந்து கொடுக்கவில்லை மாறாக தனக்கு சொந்தமல்லாத யுத்தத்தில் மீட்கப்பட்ட பொருளிலிருந்து எடுத்துக் கொடுத்தான் என்று சொல்லுகிறீர்களா?

பாஸ்டர்.ஜோன்ஸ்: ஆம் அப்படித்தான் வேதம் கூறுகிறது.

நீதிபதி: ஆபிரகாம் தனது சுய சம்பாத்தியத்திலிருந்து அல்லது சொந்தப் பொருளிலிருந்து மெல்கிசேதேகிற்கோ அல்லது வேறு யாருக்குமோ தசமபாகம் கொடுத்ததாக வேதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: அது…..வந்து…இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

நீதிபதி: வேதத்தை நன்கு கற்றறிந்து போதகராக இருக்கும் நீங்கள் “நினைக்கிறேன்” என்றெல்லாம் நீதிமன்றத்தில் பதிலளிக்கக் கூடாது. ஆபிரகாம் தனது சொந்தப் பொருளிலிருந்து எடுத்து தசமபாகம் கொடுத்ததாக வேதத்தில் எங்கேனும் பதிவு செய்யப்பட்டுள்ளதா? இல்லையா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: இல்லை, நான் படித்தவரை எங்கும் அப்படிப் பதிவு செய்யப்பட வில்லை.

நீதிபதி: சரி..ஆபிரகாம் மெல்கிசேதேகிற்கு எவைகளையெல்லாம் தசமபாகமாகக் கொடுத்தான்?
பாஸ்டர்.ஜோன்ஸ்: யுத்தத்தில் மீட்கப்பட்ட பொருளிலிலிருந்து கொடுத்ததாக வேதம் சொல்லுகிறது. அது கால்நடைகளாகவோ, உணவாகவோ அல்லது மக்கள் பயன்படுத்திய பிற பொருட்களாகவோ இருக்கலாம்.

நீதிபதி: பணத்தை தசமபாகமாகக் கொடுத்ததாக அங்கே குறிப்பிடப்பட்டுள்ளதா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: இல்லை
நீதிபதி: சரி…ஆபிரகாம் விஷயத்தில் எனது கடைசிக் கேள்வி, மெல்கிசேதேகிற்கு தசமபாகம் கொடுக்கச் சொல்லி தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிட்டாரா?

பாஸ்டர்.ஜோன்ஸ்: இல்லை, ஆபிரகாம் அதைத் தானே விரும்பிப் பரிசாகக் கொடுத்தான்

நீதிபதி: நீங்கள் சொன்னவைகளை எல்லாம் வைத்துப் பார்த்தால், ஆபிரகாம் மெல்கிசேதேகிற்கு தானே விரும்பித்தான் பரிசாகக் கொடுத்தான், அதைக் கொடுக்கும்படி யாரும் அவனை நிர்பந்திக்கவில்லை, கொடுத்தது பணமும் அல்ல என்பது தெளிவாக விளங்குகிறது. அப்படியானால் எல்லாக் கிறிஸ்தவர்களும் தங்களது மாத வருமானத்தில் 10% பணத்தை திருச்சபைக்கு தர வேண்டும் என நிர்பந்திப்பது என்ன நியாயம்?
நீங்கள் உங்கள் சொந்த வாயால் ஒப்புக்கொண்ட காரியங்களை வைத்தே இதுவரை உங்கள் சொந்த லாபத்திற்காக வேதத்தை திரித்து உபதேசித்து மக்களைச் சுரண்டியிருக்கிறீர்கள் என்பது புலனாகிறது.
பாஸ்டர்.ஜோன்ஸ்: நீதிபதி அவர்களே! சற்றுப் பொறுங்கள், தசமபாகம் விஷயத்தில் ஆபிரகாமின் காரியத்தை மேற்கோள் காட்டிப் போதித்தது எவ்வளவு மதியீனம் என்பதை நான் இப்பொழுது உணர்கிறேன். ஆனால் தசமபாகம் குறித்ததான என்னுடைய நம்பிக்கைக்கு ஆதரவாக வேதத்தில் இன்னும் பல உதாரணங்கள் இருக்கின்றன. யாக்கோபு தேவனுக்கு எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது. நாம் அவருடைய மாதிரியைப் பின்பற்ற வேண்டும்.

நீதிபதி: சரி..யாக்கோபு என்ன கூறுகிறார் என்று பார்ப்போம். நீங்கள் மேற்கோள் காட்டிய பகுதியை வேதத்திலிருந்து வாசியுங்கள்.
பாஸ்டர்.ஜோன்ஸ்: நிச்சயமாக…ஆதியாகமம் 28:20-22 வரை வாசிக்கிறேன் கேளுங்கள் “அப்பொழுது யாக்கோபு: தேவன் என்னோடே இருந்து, நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் எனக்குத் தந்து, என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திருப்பிவரப்பண்ணுவாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்; நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனைபண்ணிக்கொண்டான்” என்று வேதம் தெளிவாகச் சொல்லுகிறது.

நீதிபதி: நாம் யாக்கோபுடைய மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்று சொன்னீர்கள் அல்லவா பாஸ்டர்.ஜோன்ஸ்?
பாஸ்டர்.ஜோன்ஸ்: ஆம்! யாக்கோபு தசமபாகம் தருவதாகப் பொருத்தனை பண்ணினார் நாமும் அவ்வாறே செய்ய வேண்டும்.
நீதிபதி: இங்கு நான் ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன், யாக்கோபு என்ன பொருத்தனை பண்ணினார்? தேவன் என்னை ஆசீர்வதித்தால் மாத்திரமே…தசமபாகம் தருவேன் என்றல்லவா கூறுகிறார். நான் தசமபாகம் தரவேண்டுமானால் தேவன் முதலாவது என்னை ஆசீர்வதிக்க வேண்டும் என்ற நிபந்தனை இங்கு வருகிறது. நாமும் இந்த மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறீர்களா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: நான் அதைக் குறிப்பிடவில்லை…
நீதிபதி: வேறு எதைக் குறிப்பிட்டீர்கள்?
பாஸ்டர்.ஜோன்ஸ்: நாமும் கடவுளுக்கு தசமபாகம் கொடுக்க வேண்டும் என்பதுதான் அது.
நீதிபதி: நீங்கள் உங்கள் சுயலாபத்திற்காக வேதத்தைப் புரட்டுகிறீர்கள் என்பது மீண்டும் புலனாகிறது. அதுமட்டுமன்றி யாக்கோபு தனது பொருத்தனையை எப்படிக் காப்பாற்றினார் என்பதற்கான வேத ஆதாரங்களை நீங்கள் நீதிமன்றத்தில் சமர்பித்தாக வேண்டும். மேலும் அவர் எங்கு அல்லது யாரிடத்தில் அந்த தசமபாகத்தைக் கொடுத்தார் என்பதற்கான வேத ஆதாரங்களையும் சமர்பிக்க வேண்டும் ஏனனில் அதைப் பெற்றுக் கொள்ள அந்த காலத்தில் தேவாலயமோ லேவியரோ இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமல்லவா?

பாஸ்டர்.ஜோன்ஸ்: அவர் பொருத்தனையை நிறைவேற்றினார் என்பதற்கான ஆதாரங்களோ அல்லது அதை எங்கு அல்லது யாரிடத்தில் கொடுத்தார் என்பதற்கான ஆதாரங்களோ வேதத்தில் எங்குமே இல்லை.
நீதிபதி: யாக்கோபு தானே விரும்பித்தான் அந்தப் பொருத்தனையைச் செய்தார் என்பதும் மேலும் அது ஒரு நிபந்தனைக்குட்பட்ட பொருத்தனை என்பதும் தெளிவாக இருக்கிறது. ஆக பொருந்தாத இந்த வேத பகுதியை மேற்கோள்காட்டி  தசமபாகம் செலுத்த வேண்டும் என்பதை கட்டளையாக சபையில் போதிக்கக் கூடாது என்பதை ஒப்புக் கொள்ளுகிறீர்களா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: ஒப்புக் கொள்ளுகிறேன், ஆனால் ஜனங்கள் தசமபாகம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தும் பல்வேறு வேதவசனங்கள் இருக்கின்றன.

நீதிபதி: நீங்கள் இதுவரைக் கொடுத்த எந்த பதிலுமே திருப்தியாக இல்லை. நீங்கள் வேத வாக்கியத்தை எடுத்து அதை உங்கள் லாபத்துக்காக தவறாகப் பயன்படுத்துகிறீர்கள் என்பது மட்டும் தெளிவாக விளங்குகிறது. ஆனாலும் தாங்கள் சமுதாயத்தில் ஒரு உயர்ந்த பொறுப்பில் உள்ள குடிமகன் என்பதால் தங்கள் வாதத்தை நிரூபிக்க இன்னும் ஆதாரங்களை எடுத்து வைக்க வாய்ப்பு தருகிறேன்.
பாஸ்டர்.ஜோன்ஸ்: மிக்க நன்றி! மல்கியாவின் புத்தகத்தில் 3 ஆம் அதிகாரம் 8 ஆம் வசனமுதல் வாசிக்கிறேன் ”மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள். தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே. நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; ஜனத்தாராகிய நீங்கள் எல்லாரும் என்னை வஞ்சித்தீர்கள். என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.” இதிலிருந்து நாம் தசமபாகம் தரவேண்டும் என்றும் தராவிட்டால் கர்த்தர் சபிப்பார் என்றும் வேதம் சொல்லுகிறது.
நீதிபதி: இதைக் கர்த்தர் யாரிடம் கூறுகிறார்?
பாஸ்டர்.ஜோன்ஸ்: இஸ்ரவேல் மக்களிடம்…
நீதிபதி: அப்படியா?…மல்கியா 2:1 ஐ வாசிக்க முடியுமா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: சரி, வாசிக்கிறேன்..”இப்போதும் ஆசாரியர்களே இந்தக் கட்டளை உங்களுக்குரியது…”
நீதிபதி: அப்படியானால் மூன்றாம் அதிகாரத்தில் ஆசாரியர்களிடம் பேசி முடித்துவிட்டாரா?

பாஸ்டர்.ஜோன்ஸ்: இல்லை யுவர் ஆனர்!
நீதிபதி: பாஸ்டர்.ஜோன்ஸ் அவர்களே! பதில் சொல்லுங்கள் இங்கும் கர்த்தர் பணத்தை தசமபாகமாகச் செலுத்தச் சொல்லுகிறாரா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: அக்காலத்தில் பணம் புழக்கத்தில் இல்லை
நீதிபதி: தவறு! வேதவிற்பன்னரான தங்களுக்குத் தெரியாதா? பணப்புழக்கத்தைக் குறித்து ஆதியாகமத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. மல்கியா புத்தகமானது ஆதியாகமத்துக்குப் பின் பல நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்டது. இங்கு ஆகாரங்களையெல்லாம் பண்டகசாலைக்குக் கொண்டுவரும்படி கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் லேவியரும் தகப்பனற்ற பிள்ளைகளும் ஏழை விதவைகளும் உண்டு பசியாறும்படிக்கே!
கவனியுங்கள்! இங்கும் கூட தசமபாகம் என்பது ஆகாரமே தவிர பணம் அல்ல…
பாஸ்டர்.ஜோன்ஸ்: (பதில் இல்லை)
நீதிபதி: இந்தக் கட்டளையானது நியாயப்பிரமாணத்தின் கீழிருந்த ஒரு தேசத்துக்குக் கொடுக்கப் பட்டது. இயேசு கிறிஸ்து அந்த நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றி விட்டார் என்பதையும் இனி நாம் நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்கள் அல்ல என்பதையும் மறந்துவிட்டீர்களா? இங்கும் கூட நீங்கள் ஆகாரம் என்று இருக்கிறதை பணம் என்று புரட்டி போதிக்கிறீர்கள். ஆகாரம் என்று இருந்த தசமபாகத்தை தேவன் பணம் என்று மாற்றிவிட்டார் என்று வேதத்தில் ஏதேனும் ஒரு ஆதாரமாவது இருக்கிறதா?

பாஸ்டர்.ஜோன்ஸ்: எனக்குத் தெரிந்து இல்லை…
நீதிபதி: பழைய ஏற்பாட்டில் நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டிருந்தவர்களுக்கு தேவன் கொடுத்த ஒரு குறிப்பிட்ட கட்டளையை எடுத்து, திரித்து அதைப் புதிய ஏற்பாட்டு ஜனங்களுக்குப் போதிக்கிறீர்கள், உங்களுக்கு வருமனம் வரவேண்டுமென்பதற்காக. இதைத் தவறு உங்கள் மனசாட்சி உங்களுக்கு உணர்த்தவில்லையா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: பழைய ஏற்பாட்டில் மட்டுமல்ல, புதிய ஏற்பட்டிலும் கூட இயேசு தசமபாகத்தைக் குறித்து கட்டளை கொடுத்திருக்கிறார். மத்தேயு 23:23ஐ வாசித்துப் பாருங்கள் மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டும். இங்கு இயேசு தசமபாகம் செலுத்துவதை விடாதிருக்க வேண்டும் என்று சொல்லுகிறார்.

நீதிபதி: உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கட்டும், இதை இயேசு யாரிடம் சொல்லுகிறார்?
பாஸ்டர்.ஜோன்ஸ்: வேதபரகரிடமும் பரிசேயரிடமும்

நீதிபதி: நீங்கள் வேதபாரகரா? பரிசேயரா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: ஐயோ!…இரண்டுமே இல்லை.
நீதிபதி: இயேசு இங்கு நியாயப்பிரமாண சட்டத்தைக் கைக்கொள்ளுவதை விடாதிருக்கவேண்டும் என்று சொல்லுகிறார்.  அப்படியானால் நீங்கள் நியாயப் பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவரா?

பாஸ்டர்.ஜோன்ஸ்: இல்லை
நீதிபதி: ஏன் இல்லை?
பாஸ்டர்.ஜோன்ஸ்: ஏனென்றால் இயேசு நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றிவிட்டார்.
நீதிபதி: அதை அவர் எப்பொழுது நிறைவேற்றினார்?
பாஸ்டர்.ஜோன்ஸ்: அவர் சிலுவையில் மரித்தபோது
நீதிபதி: அப்படியானால் நியாயப்பிரமாணமானது இயேசு சிலுவையில் மரிக்கும்வரை அதிகாரத்திலிருந்தது அல்லவா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: ஆம்! சரிதான்…

நீதிபதி: நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிகிறதல்லவா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: புரிகிறது யுவர் ஆனர்!…இயேசு மரிக்கும் வரை நியாயப்பிரமாணம் அதிகாரத்திலிருந்தது. வேதபாரகரும் பரிசேயரும் அதற்குக் கீழ்ப்பட்டிருந்து நியாயப்பிரமாணச் சட்டத்தின் ஒரு கட்டளையான தசமபாகத்தைச் செலுத்த வேண்டிய கட்டாயத்திலிருந்தார்கள். எப்பொழுது நியாயப்பிரமாணம் நிறைவுற்றதோ அப்பொழுது தசமபாகமும் நிறைவுற்றது.
நீதிபதி: அந்த வசனத்தை நீங்கள் மறுபடியும் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவர்கள் எவற்றை தசமபாகமாகச் செலுத்தினார்கள்?

பாஸ்டர்.ஜோன்ஸ்: ஒற்தலாம், வெந்தயம், சீரகம்

நீதிபதி: இங்கும் பணம் குறிப்பிடப்பட்டுள்ளதா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: இல்லை, ஆனால் உணவுப் பொருட்களை மக்கள் தசமபாகமாகக் கொடுத்தால் நாங்கள் சபையை எப்படி நடத்துவது? நாங்கள் சபைக்கட்டிடம் கட்ட வாங்கிய கடனைச் செலுத்த வேண்டும், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும், மற்ற கட்டணங்களைக் கட்ட வேண்டும். எங்கள் குடும்பத்தையும் பராமரிக்க வேண்டுமல்லவா? நாங்கள் எங்கள் மக்கள் தரும் பணத்தைச் சார்ந்து இருக்கிறோம்.
நீதிபதி: உங்கள் தேவைகளைச் சொல்லி தவறுகளை நியாயப்படுத்த முடியாது பாஸ்டர்.ஜோன்ஸ். உங்கள் கடனையும் கட்டணங்களையும் கட்ட வேண்டுமென்பதற்காக வேத வசனத்தைத் திரித்து தேவன் ஆசீர்வதிப்பார் என்று நயங்காட்டியும் தராவிட்டால் தேவன் சபிப்பார் என்று பயங்காட்டியும் அப்பாவி ஜனங்களைச் சுரண்டுகிறீர்கள். உங்களை ஆவிக்குரிய தகப்பனாகவும் தங்கள் மேய்ப்பனாகவும் ஏற்றுக்கொண்டு உங்களை கிறிஸ்துவின் ஸ்தானாதிபதிகள் என்று நம்பும் ஜனங்களை நடத்துகிற விதம் இதுதானா? சொல்லுங்கள்.
நீதிபதி: முடிப்பதற்குமுன் உங்களுக்காக சில காரியங்களைச் சொல்லுகிறேன், பாஸ்டர்.ஜோன்ஸ் அவர்களே! கேளுங்கள்.
தசமபாகம் என்பது பணமல்ல, அது ஆகாரம். அது ஏழைகளுடைய வயிற்றுப் பசி ஆற்ற கொடுக்கப்பட்டது உங்கள் ஆடம்பர கட்டடங்களுக்காக அல்ல.
அது நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டிருந்தவர்களுக்கு விதிக்கப்பட்டது. புதிய ஏற்ப்பாட்டு சபைக்கல்ல.
அப்படியானால் புதிய ஏற்பாட்டு சபையில் உள்ள ஏழைகளை எப்படி போஷிப்பது? புதிய ஏற்பாட்டு விசுவாசிகள் தங்களிடையே இருந்த ஏழைகளை தாங்களே போஷித்தார்கள் என்று வேதம் கூறுகிறது. ஆதித்திருச்சபை விசுவாசிகளின் காணிக்கைகள் அவர்களுக்குள்ளே இருந்த தரித்திரரை போஷித்ததே தவிர அப்போஸ்தலரை கோடீஸ்வரர்கள் ஆக்கவில்லை.
புதிய ஏற்பாட்டு விசுவாசிகள் எப்படிக் கொடுக்க வேண்டும் என்று பவுல் 2கொரி9:7 இல் ஆலோசனை கூறுகிறார். அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார். ஒருவன் தானே விருப்பப்பட்டு தனது வருமானத்தில் 10% கொடுப்பது தவறு அல்ல. ஆனால் அப்படிக் கொடுக்கச்சொல்லி வற்புறுத்துவதே தவறு.
நீங்கள் மறுபடியும் ஜனங்களை அடிமைத்தனத்துக்குள்ளும் சாபத்துக்குள்ளும் தள்ளுகிறீர்கள் கலாத்தியர் 3:10 சொல்லுகிறது ”நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே” மேலும் கலாத்தியர் 5:4 சொல்லுகிறது ”நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள்” ஏற்கனவே விடுதலை பெற்ற மக்களை மறுபடியும் அடிமைத்தனத்துக்குள்ளாக இழுத்துச் செல்லுவது எவ்வளவு பயங்கரமான பாவம் என்பதை அறியீர்களா?
பாஸ்டர்.ஜோன்ஸ்: கனம் நீதிபதி அவர்களே! இப்பொழுது உணர்கிறேன். சுயாதீனம் பெற்ற மக்களை மறுபடியும் அடிமைத்தன நுகத்துக்கு இழுத்துச் செல்லுவது எவ்வளவு பெரிய பாவம்! இதை இவ்வளவு நாட்களாக அறியாது இருந்துவிட்டேன்.
நான் இருந்த சபையில் எந்த போதனையைக் கேட்டேனோ அதையே நானும் போதிக்க ஆரம்பித்து விட்டேன். வேத வார்த்தையை ஆராய்ந்து பார்க்கவில்லை.
ஆம்! நான் குற்றவாளி என்பதை ஒத்துக் கொள்ளுகிறேன். இனி இந்தத் தவறை ஒரு போதும் செய்ய மாட்டேன்.

From: http://www.voiceofjesus.in/

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

கைலாச மகரிஷியின் வாழ்க்கை வரலாறு

கைலாச மகரிஷியின் வாழ்க்கை வரலாறு
கைலாச மகரிஷியை பார்க்க வேண்டுமென்றால் இமயமலைக்குத்தான் போக வேண்டும். அங்க தான் இருக்கிறார். அவரை முதலில் பார்த்து அவர் சொன்ன காரியங்களை புத்தகமாக எழுதியது சாது சுந்தர் சிங். சாது சுந்தர் செல்வராஜும் அதை revise பண்ணி தற்போது எழுதியிருக்கிறார்.

கைலாச மகரிஷியின் வாழ்க்கை வரலாறு

இவர் எகிப்திலுள்ள அலெக்சாண்டிரியா பட்டணத்தில் 1594 ஆம் ஆண்டு ஒரு தீவிரமான முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தார். முகமது நபியை தீவிரமாக பின்பற்றுபவராக வளர்க்கப்பட்டிருக்கிறார். நல்ல ஆவிக்குரிய ஞானம் வரும்படியாக, தனது 30 ம் வயதில் உலகத்தைத் துறந்து, துறவிபோல் வாழ்ந்து , இரவும் பகலும் தியானத்திலே கழித்திருக்கிறார்.ஆனாலும் அவர் ஆத்துமாவில் கொஞ்சமும் அமைதியோ, சந்தோஷமோ உண்டாகவில்லை. இப்படி ஆத்தும வருத்தத்தோடு இருக்கையில், ஒரு நாள் ஒரு கிறிஸ்தவ ஊழியர் இந்தியாவிலிருந்து பிரசங்கம் பண்ண எகிப்து வந்திருப்பதாகக் கேள்விப்பட்டு,அவரைப் பார்க்க வேண்டும் என்று மிகவும் விருப்பப்ட்டு பெஞ்சில் அமர்ந்திருக்கையில், எதிர்பாராத விதமாக அந்த பரிசுத்தவான் இவர் முன் தோன்றியிருக்கிறார்.

அவர் இயேசு கிறிஸ்து பற்றி எடுத்து சொல்லி, அவர் இரட்சகர், பாவங்களை மன்னிக்கிறவர், வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களுக்கு இளைப்பாறுதல் தருகிறவர் என்று சில நாட்கள் சத்தியம் சொல்ல, அதைக் கேட்டு, இவர் உள்ளம் இயேசு கிறிஸ்துவின் மேல் இழுக்கப்பட்டு, அவரை இரட்சகராக ஏற்றுக் கொண்டிருக்கிறார். ஏற்றுக் கொண்டவுடன் இவர் ஆத்துமா சொல்லி முடியாத சந்தோஷத்தாலும், சமாதானத்தினாலும் நிரம்பி வழிந்திருக்கிறது. இந்த சந்தோஷம் பிறருக்கும் கிடைக்க வேண்டும், பிறகுக்கு சுவிசேஷம் அறிவிக்க வேண்டும் என்று அவர் உள்ளம் பற்றி எரிந்ததால், தனக்கு ஆண்டவரைப் பற்றி சொன்ன பரிசுத்தவானோடு இணைந்து ஊழியம் செய்யும்படி அவருடன் சேர்ந்து கொள்கிறார்.

மகரிஷியை ஆண்டவருக்குள் நடத்திய அந்த பரிசுத்தவான் பெயர் எர்னாஸ் (Yernaus). இவர் பரிசுத்த ஃப்ரான்சிஸ் சேவியரின் (St Francis Xavier 1506-1552) நெருங்கிய உறவினராவார்.எர்னாஸ் இரட்சிக்கப்பட்டவுடன் தன் மாமா ஃப்ரான்சிஸ் சேவியரைப் போல உலகமெங்கும் சென்று சுவிசேஷம் அறிவித்து வந்தார். இவர் இந்தியாவில் பல வருடங்கள் தங்கி ஊழியம் செய்தார். இவர் பேரரசர் அக்பர்(1556-1605), இன்னும் பல பெரிய மதத்தலைவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்.மன்னர் கான்ஸ்டாண்டைன் காலத்து கிரேக்க மொழியிலான தோல் சுருளில் எழுதப்பட்ட வேதம், ஃப்ரான்சிஸ் சேவியரிடமிருந்து, எர்னாஸுக்கு வந்து அவர் தன் கடைசிக் காலத்தில் தன் சீடனான மகரிஷிக்கு கொடுத்துச் சென்றார்.

எர்னாஸுடன் பல வருடங்கள் இணைந்து ஊழியம் செய்த மகரிஷியை, ஆவியானவரின் நடத்துதல் படி தனியே பிரிந்து போய் ஊழியம் செய்யும்படி குரு எர்னாஸ் வலியுறுத்த, அவரும் அப்படியே அடுத்த 75 வருடங்கள் பல ஊர், பல நாடுகள் சுற்றித் திரிந்து ஊழியம் செய்திருக்கிறார். அதனால் அவ்ருக்கு 21 மொழிகள் சரளமாக பேசத் தெரியும். 105 வயதானபோது, முன்போல் தீவிரமாக அலைந்து ஊழியம் செய்ய சரீரம் இடங்கொடுக்காததால், எஞ்சியுள்ள வாழ்நாட்களை ஓரிடத்தில் தங்கி ஜெபத்தில் கழிக்கலாம் என்று நினைத்து, அவர் ஊழியம் செய்யும்போது அவரை கவர்ந்த அழகான, அமைதியான கைலாய பர்வதம் (இமயமலை) ஞாபகம் வர அங்கே வந்து ஒரு குகையில் தங்கி அங்கிருக்கும் மூலிகைகள், கீரை, பழங்களைத் தின்று வாழ்ந்திருக்கிறார்.குளிர்காலத்தில் கரடிகள் குகைக்குவர இவரும் கரடிகளும் ஒன்றாய் படுத்துக்கொள்வார்களாம்! இப்படியே சில வருடங்கள் போக,எடுத்துக் கொள்ளும்படி ஆண்டவரை நோக்கித் தீவிரமாக ஜெபிக்க, ஒரு நாள் செட்டைகள் அடிக்கும் சத்தம் கேட்டிருக்கிறது. இவரது ஆன்மீகக் கண்கள் திறக்கப்ப்ட, பல தேவ தூதர்கள் இவர் இருந்த குகைக்கு இறங்கி வருவதைக் கண்டிருக்கிறார், பின்னால் இயேசு கிறிஸ்துவும் வந்திருக்கிறார். அவர் சொன்னது - 'மகனே, என் வருகை சீக்கிரத்தில் சம்பவிக்கப்போகிறது. அதுவரை நீ உலகத்தில்தான் இருக்க வேண்டும். உனக்கு மரணமில்லா சரீரம் இன்றிலிருந்து அளிக்கப்படுகிறது. பாவத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட இதயமும் கொடுக்கப்படும்.சரீரம் இங்கிருக்க ஆவியில் பூமியில் எங்கும் சென்று சபையின் நிலையறிந்து மக்களுக்காக மன்றாடுவதே உன் பணி' என்று சொல்லி ஆண்டவர் மறைந்து விடுகிறார். அன்றிலிருந்து இன்றுவரை மகரிஷி அந்த வேலைதான் செய்து வருகிறார்.

அவரது பெயர் என்ன என்று சாது சுந்தர் சிங் கேட்டதற்கு, ‘ முன்பு சாதாரன மனிதனாய் இருந்த போது எனக்கு ஒரு பெயர் இருந்தது. இப்ப SIN போய் SON முழுமையாக உள்ளிருப்பதால் என் பெயர் கிறிஸ்டியன் (Christian) ’ என்று சொன்னாராம்.

மரணத்தின் பின் சம்பவிப்பது என்ன? - கைலாச மகரிஷி.

இறந்தவுடன்(ஆவி/ஆத்துமா, சரீர பந்தம் துண்டிக்கப்பட்ட) சில நிமிடங்களுக்கு ஆவிக்கு இறந்து விட்டோம் (சரீரம் இறந்து விட்டது) என்று தெரியாமல்தான் இருக்கும். இறந்தும் உயிருடன் இருக்கும் இந்த புது அனுபவம் அதற்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கும். பின் அது இரட்சிக்கப்பட்ட நல்ல ஆத்துமாவாக இருந்தால் ஒளியுள்ள பாதையை தேரிந்தெடுக்கும். பாவியான கெட்ட ஆத்துமாவாக இருந்தால் இருளான பாதையை தானாக தேர்ந்த்தெடுக்கும். நல்ல ஆத்துமாக்களை தூதர்கள் அழைத்துக் கொண்டு போய் பரலோகில் விடுவார்கள். பாவியான பொல்லாத ஆத்துமாக்களை பொல்லாத ஆவிகள் இழுத்துக் கொண்டு போய் விடும். எல்லா ஆவிகளும் எங்கும் சுற்றித் திரிய அனுமதி இருக்கிறது. பரலோகில் இருக்கும் ஆவிகள் பூலோகம் வர பிரியப்படுகிறதில்லை. பூலோகின் பாவம் அவர்களால் சகித்துக் கொள்ள முடியாது.

சில வகையான ஆவிகள் எங்கும் போக அனுமதி கிடையாது. அவர்கள் ஒரு இடத்தில் தனியே வைக்கப்பட்டு போதிக்கப்பட்டு, பின் பரலோகம் போவார்கள். அவர்கள் யாரெனில்
1. சிறு பிள்ளைகள், குழந்தைகள் - பரலோக காரியங்களை புரிந்து கொள்ளும் வயது வருவதற்கு முன் மரித்தவர்கள்.

2. மன வளர்ச்சி அற்றவர்கள்/மன நோய் உள்ளவர்கள் - இயேசு கிறிஸ்துவைப் பற்றி சொன்னாலும் இவர்களுக்கு புரியாது.

3.ஊமை, குருடு, செவிடர்கள் - இப்படிப்பட்ட உடல் நலக் குறைபாட்டால், ஆண்டவரைப் பற்றி அறிந்து கொள்ளாத முடியாதவர்கள்.

4. ஒரு முறை கூட சுவிசெஷம் கேட்காதவர்கள்/ இயேசு கிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்தவர்கள் - இவர்கள் மேசியாவின் வருகைக்காக காத்திருந்த இடம் தான் பரதீசு. ஆபிரகாமின் மடி என்று அழைக்கப்படும் இடம். 1 பேதுரு 3 : 18-22 இல் சொல்லப்பட்ட காவலிலுள்ள ஆவிகள் இவர்களே. இவர்களுக்குத் தான் இயேசு கிறிஸ்து இரட்சிப்பின் செய்தியை சொல்லி, அங்கிருந்து மீட்டு பரலோகம் அனுப்பி வைத்தார்.

கண்ணதாசன் கண்ட இயேசு


கண்ணதாசன் கண்ட இயேசு


மங்களம்
(கவியரசு கண்ணதாசன்)



தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது
யூத நிலத்தினிலே!

சத்திய வேதம் நின்று நிலைத்தது
தரணி மீதினிலே!


எத்தனை உண்மை வந்து பிறந்தது
இயேசு பிறந்ததிலே!


இத்தனை நாளும் மானிடன் வாழ்வது
இயேசுவின் வார்த்தையிலே!




எத்தனை கோடி செய்திகளோ இங்கு
இயேசுவைப் பற்றிவரும்


அத்தனை கோடியில் முத்துக் குளித்தோம்
ஆசையில் கற்றவரும்!


இத்தனை வந்தது மாலை தொடுத்தோம்
இதிலொரு சக்திவரும்!


தத்துவம் ஏதும் விட்டு விட்டிருந்தால்
தயவுடன் பொறுத்தருளும்!



நாடு விளங்கிட வீடு துலங்கிட
நல்லவர் பாவிகளும்


கேடு மறைந்திட கீழ்நிலை மாறிட
கேட்டதும் ஓடிவாரும்!


பாடுபவர் இதை படிப்பவர்க் க்எல்லாம்
பரமனின் வீடு வரும்!


கூடுகளில் அவன் ஆவி புகுந்து
நன்மைகள் கோடிவரும்!



வாழிய சூசை வாழிய மரியாள்
வாழிய இயேசு பிரான்!


ஆழியும் வானும் உள்ள வரைக்கும்
வாழிய தேவபிரான்!


ஏழைகள் பாவிகள் இரட்சக ராக
எங்கும் நிறைந்தபிரான்!


ஆழ்தமி ழாலே அவர்புகழ் சொன்னேன்
துன்பங்கள் சேரவிடான்!



மண்ணிடை இயேசு மறுபடி வருவார்
என்பது சத்தியமே!


புண்கள் இருக்கும் வரையில் மருந்து
தேவை நித்தியமே!


விண்ணர சமையும் உலகம் முழுவதும்
இதுதான் தத்துவமே!


எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே
இயேசுவை நம்புவோமே!


(கவியரசு கண்ணதாசன் அவர்கள்,தாம் எழுதிய "இயேசுகாவியம்"என்ற நூலின் முடிவுரையாக மேற்கண்ட பாடலை "மங்களம்"என்ற தலைப்பில்(பக்கம் 398-399)எழுதியுள்ளார்கள்.)

வைரத்தை அறுக்கும் வைரம்


வைரத்தை அறுக்கும் வைரம்


கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்.(சங்-111:10).
   
 ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், தேவன் அவன்மேல் கூட்டினார்.
 ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்
 போட்டால் ஜீவபுஸ்தகத்திலிருந்தும்,பரிசுத்த நகரத்திலிருந்து,இந்தப் புஸ்தகத்தில் எழுதப்
 பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.(வெளி-22:18,19).
 
இந்தக் கடுமையான எச்சரிக்கை வெளிப்படுத்தின விசேஷத்திற்கான எச்சரிக்கை மட்டுமல்ல.
பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பெற்று வேதபுத்தகத்தின் இறுதியில் வைக்கப்பட்டு இருப்பதனால் இந்த அறிவிப்பு வேத புத்தகம் முழுவதற்குமே உரியதாகும்.பரிசுத்த ஆவியானவரால் ஏவப் பட்டவர்களால், இப்படியே தள்ளப்பட வேண்டியவை தள்ளப்பட்டு,வேதாகமம் ஆவியோடும், உண்மையோடும் தொகுக்கப்பட்டது. இந்த வேதாகமத்தில் இருக்கிற ஒவ்வொரு எழுத்தும் உண்மை என்பதே ஓர் அதிசயம் ஆகும். அதனால்தான் எதையும் கூட்டவும் குறைக்கவும் கூடாது என்ற கடுமையான எச்சரிக்கை தரப்பட்டுள்ளது.

ஒருமுறை தமிழில் உள்ள மிக அரிய இலக்கியக் கருவூலமான திருக்குறளை ஒருவர்
வேறு மொழிபெயர்த்தார். நல்ல இலக்கிய சேவைதான். கூடவே அவர் வேறொன்றையும்
செய்த்தார்.அதாவது எழுதியவர் என்ற இடத்தில் திருவள்ளுவர் என்று போடாமல்,தன் 
பெயரையே போட்டுக்கொண்டார்.ஆக, சில நேரங்களில் மனிதன் எது வேண்டுமானாலும்
செய்வான்.தேவவார்த்தைகளை அவன் புரட்டிவிடக் கூடாது என்பதற்காகத் தான் இந்த
எச்சரிக்கை. அப்படியே வேத எழுத்துக்கள் ஒவ்வொன்றும் உருட்டுகள் இல்லாமல்
காலங்காலமாக கட்டுப்பாட்டுடன் காப்பாற்றப்பட்டு வருகின்றன.உள்ளதை உள்ளதென்றும்
சொல்லுங்கள்(மத்.5:37) என்று இயேசுவானவர் கூறியபடி,வேதாகமத்தில் உள்ளபடியே நாம்
விசுவாசிக்க வேண்டும்.இயற்கை,விஞ்ஞானக் கருத்துக்களுக்கு சில வேதாகம உண்மைகள்
மாறி இருப்பதாகத் தோன்றுவதால் சிலர் புதிய புதிய விளக்கங்களை வகுத்தும் தொகுத்தும்
கூற முற்படுகின்றனர். இது தேவை அற்றது.

விஞ்ஞானம் ஒவ்வொரு கணமும் வளர்ச்சியுற்றுக் கொண்டே வருவதாகும்.அணு பிளக்க
முடியாதது என்பது டால்டனின் அணுக்கொள்கை.பின் அது பிளக்கப்பட்டது.மனித அறிவு
முற்று முடிந்த முழுமை பெற்றதல்ல.என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல.(ஏசா-55:8).
என்று தேவன் தீர்க்கமாகக் கூறுகிறார்.இன்று முரண்பாடாகத் தோன்றினாலும்,போதிய அறிவு
வளர்ச்சி பெற்ற பின்,வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது உண்மை என்று மனிதன் அறிந்து கொள்வான்.

ஆதியாகமம் 5-ஆம் அதிகாரத்தில் நமது மூதாதையர்கள் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது.இது இயற்கைக்கு முரணான கட்டுக்கதை என்று கருத்ப்பட்டது. வேதம் உண்மையைத் தவிர வேறு எதையும் கூறுவதில்லை என்று நம்பிய,அறிந்த வேத அறிந்த வேத அறிந்த வேத அறிஞர்கள் கூட இந்த இடத்தில் தடுமாற்றம் அடைந்தனர். இவை வெறும் குறியீடுகளே என்று கருதினர்.உதாரணமாக,ஏனோக்கின் வயதாகிய 365, ஒரு வருடத்தின் மொத்த நாட்கள்--அதாவது முழுமையானா ஆயுளை குறிக்கிறது என்றும் லாமேக்கின் வயதான 777 என்பது முற்றுப்பெற்றதை குறிக்கிறது என்றும் (7-முழுமை எண்) விளக்கம் அளித்தனர். 

சரித்திரகாலத்தில் விழும் இடைவெளியை ஈடுகட்ட,தனிமனிதனின் வயது கூட்டிக்காட்டப்படுகிறது என்றார்.இதற்கு சான்றாக பத்து சுமேரியஅரசர்கள் 72,000 ஆண்டுகள் ஆண்டதாகக் கூறப்படும் புராணத்தைச் சுட்டிக் காட்டினார்.ஆனால் "எவ்வளவேனும் பொய்யுரையாத" (எபி.6:18). தேவன் அருளிய வேதம் சத்தியம் என்று பலர் விசுவாசித்தனர்.இன்றைய செய்தி என்ன? விஞ்ஞானம், வேதம் உண்மை என்று நிருபிக்கும் ஆதாரங்கல்ளைக் கொடுக்க ஆரம்பித்துள்ளது.

சமீபத்திய மரபணுக்கள் பற்றிய ஆராய்ச்சியில் தெரிவது என்ன? நமது உடலில் உள்ள 
உயிரணுக்கல் இருக்கும் குரோமோசோம்களில் உள்ள ஜீன்களே ஒரு மனிதனின் உயிர்
வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. இவற்றின் உயிர்க்குறியீடுகளே வாழ்நாள்,முதுமை,மரபு
சார்ந்த வியாதிகள்,குணநலன்கள்,பால். போன்றவற்றைக் கட்டுப்படுத்துகின்றன.இவற்றை
மறுதிட்டப்படுத்துவதின் மூலம் ஒரு மனிதனை 1000 ஆண்டுகள்கூட வாழவைக்க 
முடியும் என்று இன்று விஞ்ஞானம் நம்புகிறது. இந்த ஜெனிடிக் குறியீடுகளைப்
படித்துவிட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதன் மூலம் இதுவரை கடவுளுக்கு
மட்டுமே தெரிந்த இரகசியத்தை இவர்கள் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகின்றனர்.

இந்த விஞ்ஞானிகளின் அறிக்கையை நன்கு கவனிக்க வேண்டும். "இதுவரை 
கடவுளுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்" என்று தங்களை அறியாமலே இவர்கள்
வாயில் இருந்தே உண்மையான அறிக்கை வெளிவந்து விட்டது.ஜெனிடிக் குறியீடுகளைக்
கட்டுப்படுத்துவதின் மூலம் வாழ்நாளை கூட்டவோ குறைக்கவோ முடியும் என்பது
விஞ்ஞான ரீதியாக சாத்தியம் என்ற கோட்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததே.
இந்த ஆராய்ச்சியின் இறுதி வெற்றிக்கு நீண்டகாலமாகும். ஆனால் முடியும்.

எது எப்படி இருந்தாலும், மனித உடலின் வாழ்வியல் தன்மை மரபுக்குறியீடுகள் மூலம்
மரபணுக்களால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பது அறிவியல் உண்மை இதனை மனிதன்
தன்னாலேயே மாற்றி அமைக்க முடியும் என்று கருதுகிறான் என்றால் தேவனால் ஏன்
முடியாது என்பதே நமது கேள்வி. இந்த வெளிச்சத்திலேயே 900 ஆண்டு ஆதிப்பெற்றோர்கள்
 வாழ்ந்தார்கள் என்ற உண்மையை மேலும் ஆராய்வோம். மனிதனின் வாழ்நாள்ஆயிரம்
ஆண்டுகள் என்றே (ஆதாமின் பாவத்திற்குப் பின்) ஆதியில் தேவன் வகுத்தார்.
    * கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம்வருஷம் போலவும் 
      ஆயிரம்வருஷம் ஒருநாள் போலவும் இருக்கிறது.(2 பேது.3:8)

    * ஆயிரம் வருட அரசாட்சி(வெளி.20:6)
      * ஏழுநாள் படைப்பு (ஆதி. 1-ஆம் அதிகாரம்). 

 என்பனவற்றின் ஆழ்பொருள் நுட்பங்களை தொகுத்தால் விரியும்.மனிதனின்
பாவங்கள் காரணமாக தேவன் மனஸ்தாபப்படுகிறார். அப்பொழுது கர்த்தர்:
என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதிக்லை.அவன் மாம்சந்தானே, 
அவன் இருக்கப்போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்(ஆதி.6.3)
(நோவா காலத்து வெள்ளம் இது கூறி 120 வருடம கழித்து வந்ததையும்
இது குறிப்பிடலாம் என்பர் சில ஆய்வாளர்கள்.

இதைத்தொடர்ந்து தரப்படும் வம்சவரலாற்றில் மனிதனின் ஆயுட்காலம்
படிப்படியாகக் குறைந்து வருவதைக் காண்கிறோம்.(ஆதி.11:10-32)--நோவா 950, 
சேம் 600, அர்பக்சாத் 438,சாலா 433,ரெகூ 239,நாகோர் 148, தேராத் 205, ஆபிரகாம் 175).
நோவாவுக்கு முன் உள்ள பரம்பரையினரின் வயது 900 சுற்றி சுழல்வதையும்,
நோவாவுக்குப் பின் ஒரு கிரமமாக அது குறைந்து வருவதையும் காண்கிறோம்.
(அதாவது 1000 ஆண்டுகள் 120ஆண்டுகளை நோக்கிக் சுருங்குகிறது).
தேவன் மறுபடியும் மனிதனின்  ஆயுட் காலத்தைத் திட்டமிட்டார் என்பதற்கு 
இதுவே சான்று. பாவத்தினால் ஏற்பட்ட சாபத்தினால் பூரண வயதான 1000 ஆண்டுகளை
மனிதன் இழந்து வெறும் 120 ஆண்டுகளுக்கு ஆயுள் குறைந்தது. எங்கள் நாட்களெல்லாம்
உமது கோபத்தால் போய்விட்டது (சங்.90:9). என்று சங்கீதக்காரன் புலம்புவது, இதற்குக்
கூட பொருத்தமாகத்தானே இருக்கிறது. கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசு நாட்களைப்
பெருகப்பண்ணும் (நீதி. 10-27).

மேற்கண்ட வசனங்கள் ஒன்றை உறுதிப்படுத்துகின்றன. தெய்வ பயமும்,தேவ கோபமும் 
நமதுவாழ்நாளை நிர்ணயிக்கின்றன என்பதே. இதற்கான அடிப்படை நமது பாவமே.
எங்கள் ஆயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே(சங்.90-10) மனிதனின் வாழ்நாளை  120 ஆண்டுகள் என்ற மேல் எல்லையில் இருந்து, "பாவம்" மேலும் குறைத்து வ்ட்டதைக்  காண்கிறோம். எனவே பாவமே ஆயுளைக் குறைக்கிறது என்று அறிகிறோம்.

விஞ்ஞானம் வளர வளர, இதுவரை முரண்பாடுகள் போல் தோன்றிய உண்மைகள்
முரண்பட்டதல்ல என்று நிறுவப்படுகின்றன. வேதாகம உண்மைகள் அறிவியலுக்கு எதிரானவை அல்ல.வேதக் கருத்தை விளக்கும் அளவுக்கு விஞ்ஞானம் வளரவில்லை என்றே அர்த்தம்.ஆயுள் காலத்தைப் பொறுத்தவரையில் வேதம் கூறும் 1000 ஆண்டுகள் உண்மையே. ஆதாம் முதற்கொண்ட ஆதி பிதாக்கள் பாவம் பரவாத பூமியில் நீண்ட நாள் வாழ்ந்தனர்.இது கட்டுக் கதை அல்ல என்று இன்று விஞ்ஞானம் மெய்ப்பிக்கிறது.

From: http://tamilsamayam.blogspot.in/