பக்கங்கள்

செவ்வாய், 15 ஜனவரி, 2013

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து- என்னை காண்கிற தேவன்! என்னை காக்கிற தேவன்!

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து- என்னை காண்கிற தேவன்! என்னை காக்கிற தேவன்!

 "இயேசுவின் மகிமை"யை படித்து, இயேசுவை தன் இரட்சகராக ஏற்றுக்கொண்டேன் என்று - தஞ்சாவூர் மாவட்டம் "வல்லம்" அருகில் உள்ள "பிள்ளையார்பட்டி"யை சேர்ந்த அன்பு சகோதரர் எஸ்.எம்.ஞானசேகரன் சொல்கிறார்.

இவர், "இயேசுவின் மகிமை"க்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

"கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரருக்கு, தங்களின் "இயேசுவின் மகிமை" மூலம், 1991-ம் ஆண்டு இயேசுவை என் இரட்சகராக ஏற்றுக்கொண்டேன்.

"இயேசுவின் மகிமை"யில் முன்பக்க அட்டையில் போடப்பட்டு இருந்த "நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை. நான் கைவிடுவதும் இல்லை"- என்ற கர்த்தருடைய வார்த்தைதான் என்னை சந்தித்தது.

அன்றுமுதல் இன்றுவரை கர்த்தரையே சேவிக்கிறேன். என் தேவைகளை அவ்வப்போது கர்த்தர் தந்து வருகிறார்.
கர்த்தர் தம்முடைய வார்த்தையின்படியே இன்றுவரை என்னை கைவிடாமல் நடத்தி வருகிறார்.

எனக்கு பாடல் எழுதி பாடும் வரத்தையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தந்து இருக்கிறார்.

பல வருடங்களுக்கு முன்பாக "இயேசுவின் மகிமை"யில் "ஏழைக்கு பெலன் இயேசு" என்ற பாடலை வெளியிட்டு இருந்தீர்கள். இப்போதும் நான் ஒரு பாடலை எழுதி இருக்கிறேன்" - என்று குறிப்பிட்டு அந்த பாடலையும் தன்னுடைய கடிதத்தில் எழுதி, அனுப்பி இருக்கிறார்.

இயேசுவால் இரட்சிக்கப்பட்ட சகோதரர் ஞானசேகரன் எழுதி உள்ள அந்த பாடலை இனி படிப்போமா?

உமக்கே ஸ்தோத்திரம்
உன்னத தேவனே!
எமக்காக பரிந்து பேசும்
இயேசு ராஜனே! - (உமக்கே...)

பாவத்தை போக்கியே
பரிசுத்தம் ஆக்கும்
பாசத்தின் எல்லையே- உமக்கு
பலகோடி ஸ்தோத்திரம்! - (உமக்கே...)

நீதியின் பாதையில்
நித்தமும் நடத்திடும்
ஆதி அந்தம் இல்லாத
அருட்ஜோதியே ஸ்தோத்திரம்! - (உமக்கே...)

கன்மலையின் தேனினால்
களிப்புறச் செய்திடும்
தன்னிகர் இல்லாத
தலைவரே ஸ்தோத்திரம்! - (உமக்கே...)

காண்கிற தேவனாய்
காக்கிற தேவனாய் - இன்ப
கானானுக்கு வழிகாட்டும்
கர்த்தரே ஸ்தோத்திரம்! - (உமக்கே...)

அன்பானவர்களே!

உங்கள் ஜெப வேளையில் சகோதரர் எழுதிய இந்த பாடலை பாடி-
இயேசுவை துதியுங்கள்!
இயேசுவுக்குள் மகிழுங்கள்!
இயேசுவுக்கு மகிமையை செலுத்துங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக