பக்கங்கள்

செவ்வாய், 11 டிசம்பர், 2012

பாவக்காய் சிப்ஸ்/Pavakai chips


பாவக்காய் சிப்ஸ்/Pavakai chips


தேவையானவை:
பாவக்காய்_1
கடலைமாவு_ஒரு கைப்பிடி
அரிசிமாவு_ஒரு டீஸ்பூன் அளவிற்கு
மிளகாய்த்தூள்_காரத்திற்கேற்ப‌
மஞ்சள்தூள்_சிறிது
உப்பு_சிறிது
எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
பாவக்காயைக் கழுவித் துடைத்துவிட்டு ஒரே அளவான வில்லைகளாக்கவும்.
ஒரு தட்டில் கடலைமாவு,அரிசிமாவு,மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு ஆகிய அனைத்தையும் ஒன்றாகக் கலந்துகொள்ளவும்.
பாவக்காய் வில்லைகளை கலந்து வைத்துள்ள மாவுக்கலவையில் புரட்டி எடுக்கவும்.
ஒரு வாணலில் கொஞ்சமாக (வத்தல்/வடாம் பொரிப்பது மாதிரி)எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பாவக்காய் வில்லைகளை எடுத்து ஒவ்வொன்றாக எண்ணெய் கொண்டமட்டும் போட்டு பொரிக்கவும்.
ஒருபக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பிவிட்டு வெந்ததும் எடுக்கவும்.
இப்போது நல்ல மொறுமொறுப்பான,சுவையான‌ கசப்பே இல்லாத (உண்மையாகவே) பாவக்காய் சிப்ஸ் சாப்பிடத்தயார்.
சாதத்துடனோ அல்லது மாலை நேர ஸ்நாக்ஸாகவோ சாப்பிடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக