பக்கங்கள்

செவ்வாய், 11 டிசம்பர், 2012

காராசேவு


காராசேவு


தேவையானப் பொருள்கள்:
கடலை மாவு_2 கப்
அரிசி மாவு_1/2 கப்
மிளகாய்த் தூள்_ஒரு டீஸ்பூன்
மிளகு_10 லிருந்து 15 எண்ணிக்கைக்குள்
பெருங்காயம்_சிறிது
உப்பு_தேவைக்கு
அரைத்து சேர்க்க:
கிராம்பு_2
பட்டை _சிறிது
கசகசா_1/4 டீஸ்பூன்
பூண்டு_ஒரு பல்
செய்முறை:
முதலில் கடலை மாவு,அரிசிமாவு,மிளகாய்த் தூள் இவ்ற்றை ஒன்றாகக் கலந்து சல்லடையில் சலித்து திப்பிகள் இருந்தால் நீக்கிவிடவும்.பிறகு மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதனுடன் பெருங்காயம்,உப்பு,மிளகு (முழுதாகவோ அல்லது உடைத்தோ)  சேர்க்கவும்.எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து வைக்கவும்.
அரைக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை மைய அரைக்க முடிந்தால் அரைத்து மாவுடன் சேர்க்க வேண்டும்.இல்லை என்றால் அரைத்து வடிகட்டிய தண்ணீரை சேர்க்கவும்.
சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவை முறுக்கு மாவு பதத்தில் பிசைந்துகொள்ளவும்.
ஒரு வாணலியில் தேவையான எண்ணெய் விட்டு காய வைக்கவும். கடைகளில் காரா சேவுக்கென்று கரண்டிகள் கிடைக்கும்.(நான் பயன்படுத்தியது கேரட் துருவி).
ஒரு கையால் கரண்டியைப் பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் மாவைத் தேய்க்க வேண்டும். எண்ணெய் நன்றாகக் காய்ந்ததும் மாவில் இருந்து ஒரு எலுமிச்சை அளவிற்கு எடுத்து கரண்டியின் மேல் மாவை வைத்து எண்ணெய்க்கு மேலாக உள்ளங்கையால் அழுத்தித் தேய்த்து விடவும்.
மாவு விரல் நீளத் துண்டுகளாக எண்ணெயில் விழும்.எண்ணெய் கொண்ட மட்டும் தேய்த்துவிடவும்.நன்றாக வேகும்வரை மற்றொரு கரண்டியால் திருப்பி விடவும்.வெந்ததும் எடுத்து விடவும்.
காராசேவு கரண்டியைப் பயன்படுத்த முடியாதவர்கள் மாவை தேன்குழல் அச்சில் போட்டு எண்ணெய்க்கு மேலாக அச்சைப் பிடித்துக்கொண்டு விரல் நீளத் துண்டுகள் வருமாறு அழுத்தி ஆள்காட்டி விரலால் மாவை அறுத்து விடவும்.இதுபோல் எண்ணெய் கொண்டமட்டும் செய்து நன்றாக வேகவிட்டு எடுக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக