பக்கங்கள்

செவ்வாய், 11 டிசம்பர், 2012

தக்காளி ஊறுகாய்/தொக்கு


தக்காளி ஊறுகாய்/தொக்கு


தேவையானப் பொருள்கள்:
நன்கு பழுத்த தக்காளி_3
மிளகாய்த்தூள்_2 டீஸ்பூன்
மஞ்சள்தூள்_சிறிது
வெந்தயத்தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு
தாளிக்க:
நல்லெண்ணெய்_ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை(விருப்பமானால்)
செய்முறை:
முதலில் தக்காளிப்பழத்தை நன்றாகக் கழுவித்துடைத்துவிட்டு சிறுசிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
பிறகு ஒரு கனமான கடாயை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துவிட்டு அரைத்து வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்கு நன்றாக வதக்கவும்.
தண்ணீர் சேர்க்க வேண்டாம்.தக்காளியில் உள்ள தண்ணீரே போதுமானது.
பாதி வதங்கிய நிலையில் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,வெந்தயத்தூள்,உப்பு சேர்த்துக் கிளறி மிதமானத் தீயில் மூடி வைத்து வேக வைக்கவும்.
தக்காளி நன்கு,தண்ணீர் வற்றி,சுருள வதங்கியதும் இறக்கி ஆற வைத்து எடுத்து வைக்கவும்.
இது எல்லா சாதத்துக்கும் நன்றாக இருக்கும்.
முக்கியமாக இட்லி, தோசை இவற்றிற்கு மிகப்பொருத்தமாக இருக்கும். மேலும் சப்பாத்தி,பரோட்டா,நாண் இவற்றிற்கும் பொருந்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக