பக்கங்கள்

செவ்வாய், 11 டிசம்பர், 2012

நாடா முறுக்கு


நாடா முறுக்கு


தேவையானவை:
கடலை மாவு_ 2 கப்
அரிசி மாவு_ 2 கப்
பெருங்காயம்_கொஞ்சம்
ஓமம்_1/2 டீஸ்பூன்(விருப்பமானால்)
உப்பு_தேவையான அளவு
தனி மிளகாய்த்தூள்_1  டீஸ்பூன்
கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
முதலில் கடலை மாவை சலித்துக்கொள்ளவும்.அதனுடன் அரிசி மாவு,பெருங்காயம்,ஓமம்,உப்பு,மிளகாய்த்தூள் இவற்றைக் கலந்து தேவையான தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும்.மாவைத் திறந்து வைக்காமல் மூடி வைக்கவும்.இல்லையென்றால் முறுக்கு பிழிவதற்குள் வறண்டுவிடும்.
அடுத்து ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.அது காய்வதற்குள் முறுக்கு அச்சில் நாடா வில்லையைப் போட்டு அது கொள்ளுமளவு மாவை எடுத்துக்கொள்ளவும். அடுத்து எண்ணெய் நன்றாகக் காய்ந்ததும் நேரிடையாகவே எண்ணெயில் ஒரு பெரிய முறுக்காகப் பிழியலாம்.அல்லது எண்ணெய் கொஞ்சமாக ஊற்றியிருந்தால் முறுக்கு அச்சை சிறிது அழுத்தி வெளியே வரும் மாவைக் கையால் அறுத்து சிறுசிறுத் துண்டுகளாக விடலாம்.அது ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி விட்டு வெந்து ஓசை அடங்கியதும் எடுத்து பேப்பர் டவலில் வைக்கவும்.இதுபோல் எல்லாவற்றையும் போட்டு எடுத்து ஆற வைத்து கண்ணாடி பாட்டிலில் வைத்துக்கொள்ளவும்.
இதனை ஓலை பகோடா என்றும் கூறுவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக