பக்கங்கள்

செவ்வாய், 11 டிசம்பர், 2012

ரவா கேசரி


ரவா கேசரி


நான்  food color எதுவும் சேர்க்கவில்லை.ஏற்கனவே உணவுப் பொருள்களில் ஏகப்பட்ட கெமிக்கலஸ் மறைமுகமா இருக்குனு சொல்றாங்க.இது தெரிந்தே, நாம்வேறு எதற்கு அதை சேர்க்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்தான்.என் குடும்பத்தின் ஆரோக்கியம் என் கையில்தானே இருக்கிறது!
உங்களுக்கு விருப்பமானால் சேர்த்து செய்யுங்கள்.தண்ணீர் கொதி வருபோது ஒரு துளி அளவிற்கு சேர்த்துக்கொள்ளலாம்.
தேவையானவை:
ரவை_ஒரு கப்
சர்க்கரை_ஒன்றரை கப்
முந்திரி
திராட்சை
ஏலக்காய்_1
குங்குமப்பூ_சிறிது
நெய்_1/4 கப் (எவ்வளவு அதிகமாக சேர்த்தாலும் நன்றாக இருக்கும்.)
செய்முறை:
ஒரு வாணலை அடுப்பில் ஏற்றி,அதில் சிறிது நெய் விட்டு ரவையைப் போட்டு சூடுவர வறுத்து ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
அதே வாணலில் ஒரு பங்கு ரவைக்கு இரண்டு பங்கு என தண்ணீர் ஊற்றி கொதி வரும் வரை மூடி வைக்கவும்.
அது கொதி வருவதற்குள் மற்றொரு வாணலில் நெய்யை ஊற்றி முந்திரி,திராட்சையை வறுத்துக்கொள்ளவும்.ஏலக்காயைப் பொடித்து வைக்கவும்.
கொதி வந்ததும் ரவையைக் கொஞ்சம்கொஞ்சமாகப் போட்டுக் கட்டித் தட்டாமல் கிண்ட வேண்டும்.இதற்கு whisk  ஐப் பயன்படுத்தலாம். தீ மிதமாக இருக்கட்டும்.
ரவை சீக்கிரமே வெந்துவிடும்.இப்போது சர்க்கரை முழுவதையும் கொட்டி நன்றாகக் கிளறவும்.இறுகி வந்த ரவை நீர்க்க ஆரம்பிக்கும்.சிறிது நெய்யை ஊற்றி விடாமல் கிளறவும்.மீண்டும் கலவை இறுகி பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும்.
அப்போது நெய்யை முந்திரி,திராட்சையுடன் சேர்த்துக் கேசரியில் கொட்டிக்கிளற வேண்டும்.குங்குமப்பூ,ஏலத்தூள் இவற்றையும் சேர்த்துக்கிளறி ஒரு நெய் தடவிய‌ தட்டில் கொட்டி சமப்படுத்தி ஆறியதும் விருப்பமான அளவில் துண்டுகள் போட்டு சாப்பிடலாம்.
இல்லை அப்படியே ஒரு பௌளில் கொஞ்சமாக‌ எடுத்துக்கொண்டு ஸ்பூனால் சாப்பிடலாம்.
இது மிக‌மிக எளிதாக செய்யக்கூடிய ஸ்வீட்டாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக